மாநிலத்திற்கு வெளியே செல்லும் தடைகளை அகற்றியது காவல்துறை.
மலேசிய காவல்துறை இன்று இரவு ஒரு மாநிலத்திலிருந்து மற்றொரு மாநிலத்திற்கு செல்லும் தடை உத்தரவை வாபஸ் பெறுகிறது.
நாடு முழுவதும் உள்ள காவல் நிலையங்களில் சிறப்பு பாரங்களை பூர்த்தி செய்ய மக்கள் படையெடுத்ததை அடுத்து இந்த தடை அகற்றப்பட்டுள்ளது என்று காவல்துறைத் தலைவர் அப்துல் ஹமீத் படோர் தெரிவித்தார்.
“இது சம்பந்தமாக, நாங்கள் தடையை நீக்கிவிட்டோம், பொதுமக்கள் இன்றிரவு பாதுகாப்பாகவும், விவேகமாகவும் பயணிக்க முடியும்”.
“இந்த விவகாரம் தொடர்பான கூட்டத்திற்கு பின்னர் நாளை ஒரு புதிய முடிவு அறிவிக்கப்படும் வரை அவர்கள் மீது எந்த தடையும் விதிக்கப்பட மாட்டாது” என்று அவர் கூறினார்.