கொரோனா வைரசை கட்டுப்படுத்த 69 வகை மருந்துகள் பரிசோதனை

கொரோனா வைரசை கட்டுப்படுத்த 69 வகை மருந்துகள் பரிசோதிக்கப்பட்டு உள்ளதாக ஆராய்ச்சியாளர்கள் குழு தெரிவித்துள்ளது.

நியூயார்க்: உயிர்க்கொல்லி நோயான கொரோனா வைரசை கட்டுப்படுத்த இன்னும் மருந்துகள் கண்டுபிடிக்கவில்லை. எனவே பல்வேறு மருந்து, மாத்திரைகள் மூலம் இந்நோயை கட்டுப்படுத்த முடியுமா? என ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

அந்த வகையில் 69 வகை மருந்துகள் பரிசோதிக்கப்பட்டு உள்ளன. இந்த தகவலை ஆராய்ச்சியாளர்கள் குழு அறிவித்துள்ளது. ‘கோவிட்-19’ என பெயரிடப்பட்டுள்ள கொரோனா வைரசை கட்டுப்படுத்த ஏற்கனவே நடைமுறையில் உள்ள பல்வேறு மருந்து, மாத்திரைகள் பரிசோதிக்கப்பட்டுள்ளன.

புற்றுநோய், பக்கவாதம் மற்றும் ரத்த அழுத்தம் உள்ளிட்ட நோய்களுக்கு 24 வகை மருந்துகளை உணவு மற்றும் மருந்தியல் நிர்வாகம் பரிந்துரை செய்து அவை நடைமுறையில் உள்ளது. இந்த மருந்துகளும் கொரோனா வைரஸ் நோய்க்கு பரிசோதிக்கப்பட்டது. இந்த மருந்துகள் ‘செல்’களை தாக்கி உள்ள கொரோனா வைரசை அழிக்குமா? என்றும் ஆராய்ச்சியாளர்கள் கண்காணித்து வருகின்றனர்.

maalaimalar