கோவிட்-19: தண்ணீர் கட்டணம் செலுத்துதலை ஒத்திவைக்கிறது மலாக்கா அரசு

கோவிட்-19 தொற்றுநோயால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உணவு பொருள்கள் மற்றும் தண்ணீர் கட்டண செலுத்துதலை ஒத்திவைத்து சிறப்பு உதவி வழங்குகிறது மலாக்கா மாநில அரசு என்று முதலமைச்சர் சுலைமான் அலி தெரிவித்தார்.

மக்களின் சுமையை குறைக்க மாநில அரசு முன்னதாக அறிவித்த பல முயற்சிகளுக்கு மேலாக இந்த இரண்டு முயற்சிகளும் உள்ளன என்றார்.

இந்த வார இறுதியில் 28 மாநில சட்டமன்றங்களில் அரிசி, சமையல் எண்ணெய், மாவு, பிஸ்கட், சர்க்கரை மற்றும் சார்டின் ஆகியவற்றைக் கொண்ட 1,000 உணவு பொட்டங்கள் உதவி தேவைப்படும் மக்களுக்கு விநியோகிக்கப்படும் என்றார்.

RM3,000 கீழ் ஊதியம் பெறும் குடிமக்கள் அல்லது சுய தொழில், நாள் சம்பளத்திற்கு வேலை செய்வோர் இதற்கு விண்ணப்பிக்கலாம்.

தண்ணீர் பில் கட்டணம் மார்ச் மாதத்திற்கு ஒத்திவைக்கப்படுவதாகவும், இதனால் மலாக்காவில் 260,000 வீடுகளுக்கு பயனளிக்கும் என்றும் அவர் கூறினார்.

இதற்கிடையில், கோவிட்-19 பாதிப்பின் விளைவாக மக்களின் சுமையை குறைக்க உதவும் வகையில், மலாக்காவில் உள்ள பெரு நிறுவனங்கள் அல்லது தனியார் நிறுவனங்கள் மாநில அரசுக்கு Maybank Islamic: 554026000401 / Maybank Islamic: 554110500466 மூலம் நன்கொடை வழங்க அழைக்கப்பட்டன .