உலக நாடுகளில் கொரோனா பாதிப்புக்கு பலி எண்ணிக்கை 32,139 ஆக உயர்ந்து உள்ளது.
பெய்ஜிங், சீனாவில் தோன்றி உலக நாடுகளை அச்சுறுத்தி வரும் கொரோனாவுக்கு 199 நாடுகள் பாதிக்கப்பட்டு உள்ளன. இதுவரை 6 லட்சத்து 83 ஆயிரத்து 536 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டு உள்ளது. அவர்களில், 1 லட்சத்து 46 ஆயிரத்து 396 பேர் சிகிச்சை முடிந்து சென்றுள்ளனர். ஒரே நாளில் புதிய பாதிப்புகளின் எண்ணிக்கை 20 ஆயிரத்து 457 ஆக உள்ளது.
அமெரிக்காவில் மிக அதிக அளவாக 1 லட்சத்து 23 ஆயிரத்து 781 பேருக்கு பாதிப்பு உறுதியாகி உள்ளது. இதனை தொடர்ந்து 2வது இடத்தில் இத்தாலி (92,472), 3வது இடத்தில் சீனா (81,439), 4வது இடத்தில் ஸ்பெயின் (78,797), 5வது இடத்தில் ஜெர்மனி (58,247) ஆகிய நாடுகளும் உள்ளன.
இதேபோன்று ஸ்பெயின் நாட்டில் இன்று ஒரே நாளில் 546 பேர் பலியாகி உள்ளனர். இங்கிலாந்து நாட்டில் 209 பேர் பலியாகி உள்ளனர். நெதர்லாந்து மற்றும் ஈரான் ஆகிய நாடுகளில் முறையே 132 மற்றும் 123 பேர் பலியாகி உள்ளனர். இத்தாலி நாட்டில் 10 ஆயிரத்து 23 பேர் வரை பலியாகி உள்ளனர். 2வது இடத்தில் ஸ்பெயின் (6,528) மற்றும் 3வது இடத்தில் சீனா (3,300) ஆகிய நாடுகளும் உள்ளன.
dailythanthi