கொரோனாவின் கோரப்பிடியில் ஸ்பெயின் – பலி எண்ணிக்கை 10 ஆயிரத்தை தாண்டியது

மருத்துவருக்கு கிருமி நாசினி தெளிக்கும் காட்சி

கொரோனாவால் பாதிப்பு அடைந்த ஸ்பெயின் நாட்டில் வைரஸ் தாக்குதலுக்கு பலியானோர் எண்ணிக்கை 10 ஆயிரத்தை தாண்டியுள்ளது மக்களை அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது.

மாட்ரிட்: சீனாவின் வுகான் நகரில் கடந்த டிசம்பரில் உருவான கொரோனா வைரஸ் தற்போது உலகையே உலுக்கி வருகிறது. உலகம் முழுவதும் 200க்கு மேற்பட்ட நாடுகளுக்கு பரவியுள்ள இந்த வைரஸ் பெருமளவில் மனித பேரழிவை ஏற்படுத்தி வருகிறது.

தடுப்பு மருந்துகள் இதுவரை கண்டுபிடிக்கப்படாத நிலையில், இந்த வைரஸ் தாக்குதலின் வீரியம் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே செல்கிறது.

தற்போதைய நிலவரப்படி உலகம் முழுவதும் 9 லட்சத்து 50 ஆயிரத்துக்கும் மேற்பட்டோருக்கு இந்த வைரஸ் பரவியுள்ளது. அவர்களில் 48 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.

இந்நிலையில், ஐரோப்பிய நாடான ஸ்பெயினில் நேற்று ஒரே நாளில் கொரோனாவுக்கு 950 பேர் உயிரிழந்துள்ளனர்.  இதனால் ஸ்பெயின் நாட்டில் கொரோனா வைரசுக்கு உயிரிழந்தோர் எண்ணிக்கை 10 ஆயிரத்தை தாண்டியுள்ளது என அந்நாட்டு சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.

malaimalar