கோரத்தாண்டவம் ஆடும் கொரோனா- 53 ஆயிரத்தை தாண்டிய பலி எண்ணிக்கை

மருத்துவமனைக்கு கொண்டு வரப்பட்ட நோயாளி

உலகம் முழுவதும் கொரோனா வைரசால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 53 ஆயிரத்தை தாண்டி உள்ள நிலையில், மருத்துவமனையில் இன்னும் சுமார் 7.5 லட்சம் மக்கள் உள்ளனர்.

ஜெனிவா: சீனாவின் ஹூபேய் மாகாணம் வுகான் நகரில் கடந்த ஆண்டு டிசம்பர் கண்டுபிடிக்கப்பட்ட கொரோனா வைரஸ் தற்போது உலகம் முழுவதும் 204 நாடுகளுக்கு பரவியுள்ளது. தடுப்பு மருந்து கண்டுபிடிக்க விஞ்ஞானிகள் தீவிர முயற்சி மேற்கொண்டு வரும் நிலையில் வைரஸ் தாக்குதலின் வீரியம் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே செல்கிறது.

நேற்று காலை நிலவரப்படி உலகம் முழுவதும் 10 லட்சத்து 15 ஆயிரத்து 505 பேருக்கு வைரஸ் தாக்கம் உறுதி செய்யப்பட்டுள்ளது. வைரஸ் தாக்குதலுக்கு இதுவரை 53 ஆயிரத்து 195 பேர் உயிரிழந்துள்ளனர். வைரஸ் பரவியவர்களில் 2 லட்சத்து 12 ஆயிரத்து 392 பேர் குணமடைந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர்.

வைரஸ் பாதிக்கப்பட்டவர்கள் 7 லட்சத்து 49 ஆயிரத்து 918 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். சிகிச்சை பெறுபவர்களில் 37 ஆயிரத்து 646 பேரின் நிலைமை மிகவும் கவலைக்கிடமாக உள்ளது.

dinamalar