கொரோனாவை கட்டுப்படுத்த போராடும் அமெரிக்கா; ஒரே நாளில் 1,100 பேர் மரணம்

கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் உலகில் எங்கும் இல்லாத அளவிற்கு அமெரிக்காவில் 1,100 பேர் உயிரிழந்துள்ளனர்.

அங்கு மிக மோசமாக பாதிக்கப்பட்ட நியூயார்க்கில் இதுவரை 2935 பேர் பலியாகியுள்ளனர். கொரோனா பாதிப்பு மிக தீவிரமாக உள்ளதால் மற்ற மாநிலங்களுடன் உதவி கோரியுள்ளார் நியூயார்க் ஆளுநர் ஆண்ட்ரூ க்யூமோ.

“நியூயார்க் நெருக்கடியான நிலையில் உள்ளது. உதவி செய்யுங்கள்” என அவர் செய்தியாளர்கள் சந்திப்பில் அவர் கேட்டுக் கொண்டார்.

ஜான்ஸ் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழக தரவுகள் படி, அமெரிக்காவில் 2,78,458 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. 7000க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.