இந்த ஆண்டு சரவாக்கில் ரமலான் மற்றும் காவாய் பஜார்கள் இல்லை – அபாங் ஜோஹரி

கோவிட்-19 தொற்று பரவுவதைத் தடுக்க இந்த ஆண்டு ரமலான் மற்றும் காவாய் பஜார்களை அனுமதிக்க வேண்டாம் என்று சரவாக் அரசு முடிவு செய்துள்ளது என்று முதல்வர் டத்தோ பாட்டிங்கி அபாங் ஜோஹரி துன் ஓபன் கூறினார்.

எனவே, வர்த்தகர்கள் மற்றும் பயனீட்டாளர்கள் இ-ரமலான் பஜார் மூலம் ஆன்லைன் வணிக நடவடிக்கைகளை மேற்கொண்டு, நோம்பு மாதத்தில் உணவு அல்லது பிற தேவைகளை வழங்க அல்லது ஆர்டர் செய்ய ஊக்குவிக்கப்படுகிறார்கள். ஜூன் 1 கொண்டாடப்படும் காவாய் தினத்திற்கான அவர்களின் ஏற்பாடுகளுக்கும் இவ்வாறு செய்ய ஊக்குவிக்கப்படுகிறார்கள்.

“ரமலான் பஜார் பொதுவாக புறநகரில் உள்ள நகரங்களிலும் பிற பகுதிகளிலும் நடைபெறும். இந்த இ-ரமலான் பஜார், ரமலான் மாதத்தில் பொதுமக்களுக்கு உணவு ஆர்டர் செய்வதை எளிதாக்குவதற்கான ஒரு முயற்சியாகும், காவாய் பஜாரும் அப்படித்தான்” என்று அவர் மிரியில் கிராமப்புற மக்களுக்கு உணவு உதவி அனுப்புவதை அடையாளப்படுத்தி ஒரு ஊடக மாநாட்டில் பேசினார்.

கடந்த மார்ச் 23 அன்று அறிவிக்கப்பட்ட மாநில அரசாங்கத்தின் உதவி தொகுப்பின் கீழ் இந்த உணவு உதவி ஒரு பகுதியாகும்.