உலகெங்கும் 14 லட்சம் பேர் பாதிப்பு

உலகெங்கும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 14,000 லட்சத்தை கடந்துள்ளது. கோவிட்-19 தொற்று காரணமாக 10,000க்கும் மேலான இறப்புகளைச் சந்தித்துள்ள மூன்றாவது நாடாகியுள்ளது பிரான்ஸ்.

இந்தியாவில் பாதிப்பு எண்ணிக்கை 5000-ஐ கடந்தது

இந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 5194ஆக அதிகரித்துள்ளது என்று இந்திய சுகாதார மற்றும் குடும்பநலத் துறை தெரிவித்துள்ளது.

இவர்களில் 401 பேர் குணமடைந்துள்ளனர், 109 பேர் மரணமடைந்துள்ளனர் மற்றும் 4643 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
கடந்த 24 மணிநேரங்களில் மட்டும் 773 பேருக்கு கோவிட்-19 தொற்று இருப்பது புதிதாக கண்டறியப்பட்டுள்ளது.

அமெரிக்காவில் 1731 பேர் பலி

நியூயார்க்கில் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 731 பேர் பலியாகி உள்ளனர். இவ்வளவு மரணங்கள் ஒரே நாளில் பதிவாவது நியூயார்க்கில் இதுவே முதல்முறை.

நியூயார்க்கில் பலியானவர்கள் எண்ணிக்கை மட்டும் 5,489. ஒட்டுமொத்தமாக அமெரிக்காவில் 12,722 பேர் உயிரிழந்து உள்ளனர்; 398,185 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

நேற்று ஒரே நாளில் அமெரிக்காவில் 1736 பேர் இறந்துள்ளனர். அங்கு கோவிட்-19 காரணமாக ஒரே நாளில் பதிவான அதிகபட்ச உயிரிழப்பு இதுவாகும்.

10,000 பேர் இறந்த மூன்றாவது நாடு

கோவிட்-19 தொற்றின் காரணமாக 10,000க்கும் மேலான இறப்புகளைச் சந்தித்துள்ள மூன்றாவது நாடாகியுள்ளது பிரான்ஸ். அங்கு மார்ச் 1ஆம் தேதி முதல் இதுவரை 10,328 பேர் இறந்துள்ளனர்.

மார்ச் 15 முதல் நாடு முழுவதும் ஊரடங்கு முடக்கநிலை அமலில் உள்ளது.

வுஹான் நகர மக்களுக்கு புதிய அனுமதி

கொரோனா வைரஸ் உருவான சீன நகரமான வுஹானில், கோவிட்-19 தொற்று இல்லை என்று உறுதி செய்யப்பட்டவர்கள் வெளியே பயணிக்க அனுமதிக்கப்பட்டுள்ளது.

தொற்று இல்லை என்று, சீன அரசின் செல்பேசி செயலி மூலம், உறுதிசெய்யப்பட்டவர்கள் மட்டும் பொதுப் போக்குவரத்தைப் பயன்படுத்தி வெளியூர் செல்லலாம்.

திங்களன்று கொரோனா காரணமாக எந்த மரணமும் நிகழவில்லை என்று செவ்வாயன்று சீன அரசு தெரிவித்த தகவலைத் தொடர்ந்து இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

ஜனவரி 23ஆம் தேதிக்கு பிறகு அந்நகரவாசிகள் வெளியூர் செல்ல அனுமதிக்கப்படுவது இதுவே முதல் முறை.
சாலை மற்றும் ரயில் போக்குவரத்து கடந்த வாரம் அங்கு தொடங்கியது.

ஹூபே மாகாணத்தில் உள்ள, 1.1 கோடி மக்கள்தொகை இந்த நகரம்தான் கொரோனா வைரஸ் பரவல் தொடங்கிய இடமாக கருதப்படுகிறது.

  1. இந்திய நேரப்படி புதன் காலை 04.41 மணி நிலவரப்படி உலகளவில் கொரோனா வைரஸ் தொற்றால் 14,28,428 பேர் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள்.

  2. இவர்களில் 82,020 பேர் உயிரிழந்துள்ளனர். 3,00,198 பேர் குணமடைந்துள்ளனர் என்று அமெரிக்காவின் ஜான் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழகத் தரவுகள் தெரிவிக்கின்றன.

  3. உலகிலேயே அதிக எண்ணிக்கையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் உள்ள நாடான அமெரிக்காவில் இதுவரை 3,96,223 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

  4. அதிகபட்சமாக இத்தாலியில் 17,217 பேர் இறந்துள்ளனர்; ஸ்பெயினில் 14,045 பேர் இறந்துள்ளனர்.

  5. 10,000க்கும் மேலான இறப்புகளைச் சந்தித்துள்ள மூன்றாவது நாடாகியுள்ளது பிரான்ஸ். அங்கு இதுவரை 10,328 பேர் இறந்துள்ளனர்.

  6. கொரோனா வைரஸ் உருவான சீன நகரமான வுஹானில், கோவிட்-19 தொற்று இல்லை என்று உறுதி செய்யப்பட்டவர்கள் வெளியே பயணிக்க அனுமதிக்கப்பட்டுள்ளது.

BBC.TAMIL