ஊரடங்கால் 40 கோடி முறைசார தொழிலாளர்கள் வறுமையில் தள்ளப்படுவார்கள் – ஐ.நா.எச்சரிக்கை

ஊரடங்கால் 40 கோடி முறைசார தொழிலாளர்கள் வறுமையில்தள்ளப்படுவார்கள் என ஐ.நா.வின் தொழிலாளர் அமைப்பு எச்சரித்துள்ளது.

ஐக்கிய நாடுகள்; இந்தியாவில் முறைசாரா தொழிலாளர்கள் சுமார் 40 கோடி பேர் வறுமையில் தள்ளப்படும்  அபாயத்தில் உள்ளனர், மேலும் உலகளவில் இந்த ஆண்டின் இரண்டாவது காலாண்டில், 19.5 கோடி  முழுநேர வேலைகள் அல்லது வேலைநேரத்தின் 6.7 சதவீதம் அழிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அரபு நாடுகளில் (8.1 சதவீதம், 5ஒ லடசம்  முழுநேர தொழிலாளர்களுக்கு சமம்), ஐரோப்பா (7.8 சதவீதம், அல்லது 1.2  கோடி முழுநேர தொழிலாளர்கள்) மற்றும் ஆசியா மற்றும் பசிபிக் (7.2 சதவீதம், 1.25 கோடி முழு) -நேர தொழிலாளர்கள்), என ஐ.நா.வின் தொழிலாளர் அமைப்பு எச்சரித்துள்ளது.

சர்வதேச தொழிலாளர் அமைப்பு (ஐ.எல்.ஓ)வெளியிட்டு உள்ள  தனது அறிக்கையில்  கொரோனா வைரஸ் தொற்றுநோயால் இரண்டாம் உலகப் போருக்குப் பின்னர் ஏற்பட்ட மிக மோசமான உலகளாவிய நெருக்கடி.

இந்தியா, நைஜீரியா மற்றும் பிரேசில் ஆகிய நாடுகளில், ஊரடங்கு  மற்றும் பிற கட்டுப்பாட்டு நடவடிக்கைகளால் பாதிக்கப்பட்ட முறைசாரா தொழிலாளர்களின் எண்ணிக்கை கணிசமாக உள்ளது.

“இந்தியாவில், முறைசாரா பொருளாதார துறையில் பணிபுரியும் 90 சதவீத மக்களின் பங்கைக் கொண்டு, முறைசாரா பொருளாதாரத்தில் சுமார் 40 கோடி   தொழிலாளர்கள் நெருக்கடியின் போது வறுமையில்  விழும் அபாயத்தில் உள்ளனர். அவர்களில் பலர் கிராமப்புறங்களுக்கு திரும்ப வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர்,

உலகளவில், 200 கோடி மக்கள் முறைசாரா துறையில் (பெரும்பாலும் வளர்ந்து வரும் மற்றும் வளரும் பொருளாதார நாடுகளில்) பணிபுரிகின்றனர், அவர்கள் குறிப்பாக ஆபத்தில் உள்ளனர் என்று அறிக்கை கூறுகிறது,கொரோனா நெருக்கடி ஏற்கனவே பல்லாயிரக்கணக்கான முறைசாரா தொழிலாளர்களை பாதித்து உள்ளது என்று ஐ.எல்.ஓ கூறி உள்ளது

dailythanthi