சர்வாதிகாரி அடால்ப் ஹிட்லரால் திறந்து வைக்கப்பட்ட ‘Deutschlandhalle’ என்ற விளையாட்டுத் திடல் பழுதடைந்ததால் நேற்று (4.12.2011) இரவு இடிக்கப்பட்டது.
அவருடைய பெருமையை பறைசாற்றும் இந்த விளையாட்டுத் திடல் 2013-ம் ஆண்டு ஒரு புதிய கருத்தரங்க மற்றும் கண்காட்சி திடலாக உருமாறப் போகின்றது. ஜேர்மனியின் இந்த திடலை இடித்த போது 200 மீற்றர் சுற்றளவில் போக்குவரத்து தடை செய்யப்பட்டது.
அடால்ப் ஹிட்லர் 1935-ம் ஆண்டு நவம்பர் 29-ம் திகதி இந்த அரங்கத்தை திறந்து வைத்தார். 1936-ம் ஆண்டு இங்கு ஒலிம்பிக் போட்டிகள் நடைபெற்றன. ஒலிம்பிக் போட்டிகள் முடிந்த பிறகு பொதுக்கூட்டம், மாநாடு போன்றவை நடத்த இந்த திடல் பயன்பட்டது.
இந்த விளையாட்டு திடலை பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த ஓர்ட்மனும், பிரிட்ஸ் வீமரும் (Franz Ohrtmann and Fritz Wiemer) இணைந்து வடிவமைத்தனர். 117 மீட்டர் நீளமும், 83 மீட்டர் அகலமும் கொண்ட இந்த அரங்கம் 16000 பார்வையாளர்கள் அமரும்படி வசதி கொண்டது. 1943-ல் நடந்த உலகப்போரில் இந்த திடல் பெரும் சேதத்தை சந்தித்தது குறிப்பிடத்தக்கது.