அமெரிக்காவில் புதிய உச்சத்தை எட்டிய உயிரிழப்பு – ஒரே நாளில் 2600 மரணங்கள்

அமெரிக்காவில் ஒரே நாளில் 2600 பேர் மரணங்கள் – டிரம்ப் கூறுவது என்ன?

கொரோனா வைரஸ் தொற்றால் மிகவும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள அமெரிக்காவில், ஒரே நாளில் கிட்டத்தட்ட 2600 பேர் இறந்துள்ளதாக ஜான்ஸ் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழக தரவு தெரிவிக்கிறது.

இது அமெரிக்காவில் மட்டுமல்ல எந்த ஒரு நாட்டிலும், இதுவரை ஒரே நாளில் ஏற்பட்ட மிகவும் அதிகபட்ச உயிரிழப்பாகும்.

அமெரிக்காவில் இதுவரை 6 லட்சத்து 37 ஆயிரம் பேருக்கு மேற்பட்டோர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், அங்கு 28,000க்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்துள்ளனர்.

கொரோனா வைரஸ் தொற்றின் தாக்கத்தின் உச்சத்தை அமெரிக்கா கடந்துவிட்டதாக அந்நாட்டின் அதிபர் டொனால்ட் டிரம்ப் கூறியிருந்த நிலையில், இந்த தரவு வெளியாகியுள்ளது.

மீண்டும் பொருளாதார, தொழில் வளர்ச்சியை மேம்படுத்தும் முயற்சியில் தற்போதைய நிலையில் அமெரிக்க மாகாணங்கள் வலுவான நிலையில் உள்ளது என்று கூறியுள்ள டிரம்ப், அது தொடர்பான வழிகாட்டுதல் நெறிமுறைகளை இன்று (வியாழக்கிழமை) வெளியிடவுள்ளார்.

BBC.TAMIL