ஆசிய பொருளாதார வளர்ச்சி 60 ஆண்டுகளில் இல்லாத வீழ்ச்சியை சந்திக்கும்

கொரோனா வைரஸ் பாதிப்பால், கடந்த 60 ஆண்டுகளில் முதல்முறையாக இந்த ஆண்டு ஆசியாவின் பொருளாதார வளர்ச்சி 1 சதவீதம் கூட இல்லாத சூழல் உருவாகியிருப்பதாக சர்வதேச நாணய நிதியம் அமைப்பு தெரிவித்துள்ளது.

ஆசியாவில் செலவினம் தொடர்பான கட்டுப்பாடு கொள்கைகளை அரசுகள் சிறப்பாக செயல்படுத்தினால் 2021-ஆம் ஆண்டில் பொருளாதார நிலை மேம்படும் என்றும் இந்த அமைப்பு மேலும் தெரிவித்துள்ளது.

கடந்த 40 ஆண்டுகளில் இல்லாத அளவு மிக கடுமையான வீழ்ச்சியை தெற்காசிய பொருளாதாரம் சந்திக்கும் என அண்மையில் உலக வங்கி எச்சரித்த நிலையில், ஆசியாவின் பொருளாதார வளர்ச்சி குறித்த சர்வதேச நாணய நிதியத்தின் இந்த எச்சரிக்கை வெளிவந்துள்ளது.

BBC.TAMIL