மே 4 முதல் இத்தாலியில் தளர்த்தப்படும் ஊரடங்கு

கொரோனா வைரஸ் தொற்றால் மிகவும் கடுமையாக பாதிக்கப்பட்ட இத்தாலியில், கடந்த மார்ச் மாத மத்தியில் அமல்படுத்தப்பட்ட முடக்கநிலை விரைவில் தளர்த்தப்படுகிறது.

7 வாரங்களுக்கு பிறகு, வரும் மே 4ஆம் தேதி முதல் இத்தாலியில் முடக்கநிலை கட்டுப்பாடுகள் சில தளர்த்தப்படுவதாக அந்நாட்டின் பிரதமர் அறிவித்துள்ளார்.

மக்கள் தங்கள் உறவினர்களை சந்திக்க முகக்கவசங்களோடு சிறு குழுக்களாக செல்லலாம் என்பது உள்ளிட்ட அறிவிப்புகளை அவர் வெளியிட்டார்.

பூங்காக்கள் திறந்திருக்கும் என்று அறிவிக்கப்பட்ட நிலையில், பள்ளிகள் செப்டம்பர் மாதம் வரை திறக்கப்படாது என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

ஞாயிற்றுக்கிழமையன்று இத்தாலியில் 260 பேர் மட்டுமே இறந்துள்ள நிலையில், கடந்த மார்ச் 14-க்கு பிறகு, இது தான் அந்நாட்டில் ஒருநாளில் நிகழ்ந்த குறைந்த அளவு மரணங்களாகும்.

இத்தாலியில் இதுவரை 26, 644 பேர் கொரோனா வைரஸ் தொற்றால் உயிரிழந்துள்ளனர். ஐரோப்பாவில் இத்தாலியில் தான் அதிகமான உயிரிழப்புகள் பதிவாகியுள்ளன.

bbc.tamil