டோக்கியோ: கிழக்காசிய நாடான ஜப்பானில், கொரோனா தொற்று அதிகரித்து வருவதை அடுத்து, அங்கு அவசர நிலை பிரகடனப்படுத்தப்பட்டது.மக்கள் வீட்டுக்குள் இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டனர். ஆனாலும், மக்கள் பணிக்கு சென்று கொண்டு தான் இருக்கின்றனர்.
உணவகங்கள், பூங்காக்களில், மக்கள் குடும்பத்துடன் கூட்டம் கூட்டமாக வந்து, பொழுதை கழிக்கின்றனர். மக்களை வீட்டுக்குள் முடங்குமாறு உத்தரவிடவும், வெளியே வருபர்களை தண்டிக்கவும், ஜப்பான் சட்டத்தில் இடமில்லை என்பதால், ஊரடங்கை கடைபிடிக்குமாறு, அவர்களுக்கு வேண்டுகோள் விடுக்கப்பட்டு வருகிறது.
dinamalar