மாட்ரிட் : 49 நாள் ஊரடங்குக்குப் பின்னர் தற்போது ஸ்பெயினில் கட்டுப்பாடுகள் தளத்தப்பட்டு வருகிறது.
கொரோனாவால் மிக மோசமாக பாதிக்கப்பட்ட நாடுகளில் ஸ்பெயினும் ஒன்று. பல்லாயிரக்கணக் கானவர்களது மறைவுக்குப் பின்னர் தற்போது ஸ்பெயினில் ஊரடங்கு கட்டுப்பாடுகள் குறைக்கப்பட்டுள்ளதால் மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். ஸ்பெயினில் உடற்பயிற்சி, நடைபயிற்சியில் ஆர்வம் உடையவர்கள் அதிகம். இதனால் காலை வேளையில் ஸ்பெயினில் பார்க் உள்ளிட்ட பொது இடங்களில் கூட்டம் அதிகமாக இருக்கும். தற்போது காலை ஜாகிங், நடைபயிற்சிக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளதால் காலையில் பலர் கூட்டம் கூட்டமாக ஜாகிங் செய்வதைப் பார்க்க முடிகிறது.
ஐரோப்பிய நாடுகளிலேயே கட்டுப்பாடுகளை அதிகம் தளர்த்திய நாடு ஸ்பெயின்தான். சுகாதாரத்துறை அமைச்சர் ருடால்ஃப் ஆன்சோபெர் அறிவுறுத்தலின் பேரில் இந்த ஊரடங்கு தளர்த்தப்பட்டது. ஸ்பெயினின் முக்கிய நகரங்களில் ஒன்றான ஆஸ்திரியாவில் சலூன்கள், சிறு கடைகள் திறக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. மே 15 வரை ரெஸ்டாரெண்ட்களை மூட அறிவுறுத்தப்பட்டுள்ளது. சமூக இடைவேளையை கடைப்பிடித்து பொது இடங்களில் நடமாட அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. ஒரு நாளில் சராசரியாக 100 மரணங்கள் ஸ்பெயினில் நிகழ்ந்து வருகின்றன.
dinamalar