குற்றவாளிக்கு துாக்கு தண்டனை ‘வீடியோ கான்பரன்ஸ்’ மூலம் தீர்ப்பு

சிங்கப்பூர் : சிங்கப்பூரில், போதைப் பொருள் கடத்தல் வழக்கை, ‘வீடியோ கான்பரன்ஸ்’ வாயிலாக விசாரித்த உச்ச நீதிமன்றம், குற்றவாளிக்கு துாக்கு தண்டனை விதித்துள்ளது.இது போன்ற முறையில் விதிக்கப்பட்ட, முதல் மரண தண்டனை இதுதான்.

தென்கிழக்கு ஆசிய நாடான சிங்கப்பூரில், கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக, முக்கிய வழக்குகள் மட்டும், வீடியோ கான்பரன்ஸ் வாயிலாக விசாரிக்கப்பட்டு வருகின்றன .இந்நிலையில், மலேஷியாவைச் சேர்ந்த புனிதன் கணேசன், 37, என்பவர், 2011ல், போதைப் பொருள் கடத்தல் வழக்கில், சிங்கப்பூரில் கைது செய்யப்பட்டார். இவ்வழக்கை விசாரித்து வந்த சிங்கப்பூர் உச்ச நீதிமன்றம், புனிதனை குற்றவாளி என தீர்ப்பளித்து, நேற்று அவருக்கு மரண தண்டனை வி தித்தது.இது குறித்து, உச்ச நீதிமன்றத்தின் செய்தித் தொடர்பாளர் கூறியதாவது:போதை மருந்து கடத்தல் வழக்கில், புனிதனுக்கு துாக்கு தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

வீடியோ கான்பரன்ஸ் வாயிலாக, மரண தண்டனை விதிக்கப்பட்ட முதல் குற்றவியல் வழக்கு இதுவாகும்.இவ்வாறு, அவர் கூறினார்.

dinamalar