மாமன்னருக்கு பிறந்தநாள் வாழ்த்தை தெரிவித்தார் முகிதீன்

பிரதம மந்திரி முகிதீன் யாசின், நாட்டில் அனைத்து மக்களையும் பிரதிநிதித்து, யாங் டி-பெர்த்துவான் அகோங் அப்துல்லா ரியாதுதீன் அல்-முஸ்தபா பில்லா ஷாவின் பிறந்தநாள் வாழ்த்தை தெரிவித்துள்ளார்.

அல்-சுல்தான் அப்துல்லா மற்றும் அவரது துணைவியார் துங்கு ஹஜா அஜீசா அமினா மைமுனா இஸ்கண்டாரியா மற்றும் அவர்களது உறவினர்களையும் முகிதீன் வாழ்த்தினார்.

“சிம்மாசனத்தில் மிகுந்த கண்ணியத்துடனும், இறையாண்மையுடனும், செழிப்புடனும் தொடர்ந்து நிழைக்க உங்களுக்கு பலத்தையும் ஆசீர்வாதத்தையும் இறைவன் அளிக்க நான் வேண்டுகிறேன்” என்று முகிதீன் தனது ட்விட்டர் மற்றும் முகநூல் இடுகைகளில் தெரிவித்துள்ளார்.