பாகிஸ்தானில் கொரோனா பாதிப்பு அடுத்த மாதம் இறுதிக்குள் 12 லட்சத்தை எட்டக்கூடும் என்று அந்நாட்டின் திட்டத்துறை மந்திரி தெரிவித்தார்.
இஸ்லாமாபாத்: இந்தியாவின் அண்டை நாடான பாகிஸ்தானிலும் கொரோனா பாதிப்பு அதிகரித்துக் கொண்டே செல்கிறது. அந்த வகையில் அங்கு ஒரே நாளில் 5,248 பேரை பாதிப்புக்கு உள்ளாக்கியதுடன், 97 பேரின் உயிரையும் கொரோனா பறித்துள்ளது. இதனால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 1,44,676 ஆகவும், பலி எண்ணிக்கை 2,729 ஆகவும் உயர்ந்துள்ளது.
கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களில் 647 பேர் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியை சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் அந்நாட்டின் திட்டத்துறை மந்திரி ஆசாத் உமர் பாகிஸ்தானில் கொரோனா பாதிப்பு அடுத்த (ஜூலை) மாதம் இறுதிக்குள் 12 லட்சத்தை எட்டக்கூடும் என்று தெரிவித்தார். இந்த கணிப்பு உறுதியானது இல்லை. அரசாங்கமும், மக்களும் இதற்கு எதிராக இணைந்து செயல்பட்டால் வைரஸ் பரவுவதை தடுத்து நிறுத்த முடியும் என்றும் அவர் கூறினார்
malaimalar