சினி இடைத்தேர்தல்: மும்முனைப் போட்டியில் களம் இறங்குகிறது பாரிசான்

சினி இடைத்தேர்தலில் பாரிசான் வேட்பாளர் முகமட் ஷரீம் முகமட் ஜெய்ன், 41, இரண்டு சுயேட்சை வேட்பாளர்களுக்கு எதிராக மூன்று முனைப் போட்டியை எதிர்கொள்கிறார்.

இன்று காலை வேட்புமனு தாக்கலில் முன்னாள் பெக்கான் பெர்சத்து துணைத் தலைவர் தெங்கு ஜைனுல் ஹிஷாம் தெங்கு ஹுசின் மற்றும் புலோக் பதிவர் முகமட் சுக்ரி முகமட் ராம்லி ஆகியோருடன் முகமட் ஷரீம் மும்முனை போட்டியில் களம் இறங்குவதாக தேர்தல் மேலாளர் ஜலிசா சுல்கிப்லி அறிவித்தார்.