ரஷியாவில் உலகப்போர் வெற்றி தினம்- அணிவகுப்பில் இந்திய முப்படை வீரர்கள் பங்கேற்பு

இந்திய வீரர்கள் அணிவகுப்பு

ரஷியாவில் இரண்டாம் உலகப்போர் வெற்றி தின கொண்டாட்டத்தில் இந்திய வீரர்கள் பங்கேற்று அணிவகுப்பு நடத்தினர்.

மாஸ்கோ: ரஷிய தலைநகர் மாஸ்கோவில் இரண்டாம் உலகப்போரின் 75-வது வெற்றி தினம் இன்று கொண்டாடப்படுகிறது. மே மாதம் நடைபெறுவதாக இருந்த வெற்றி தின அணிவகுப்பு கொரோனா அச்சுறுத்தல் காரணமாக தள்ளிவைக்கப்பட்டு இன்று நடைபெற்றது. ரஷிய வீரர்களின் சிறப்புமிக்க அணிவகுப்பு நடைபெற்றது. அணிவகுப்பை ரஷிய அதிபர் புதின் பார்வையிட்டு, உரையாற்றினார்.

இந்த வெற்றிக்கொண்டாட்டத்தில் இந்தியாவின் முப்படை வீரர்களும் பங்கேற்று அணிவகுப்பு நடத்தினர். இந்த அணிவகுப்பை ரஷிய அதிபர் புதின், இந்திய பாதுகாப்புத்துறை மந்திரி ராஜ்நாத் சிங் ஆகியோர் பார்வையிட்டனர். இதேபோல் சீன ராணுவ வீரர்களும் இதில் பங்கேற்று அணிவகுப்பு நடத்தினர்.

malaimalar