111 வாக்குகளில் சபாநாயகர் முகமட் ஆரிஃப் நீக்கப்பட்டார்

சபாநாயகர் முகமட் ஆரிஃப் யூசோப்பை நீக்குவதில் வெற்றி பெற்றுள்ளது தேசிய கூட்டணி.

222 உறுப்பினர்களில் 111 பேர் பிரதமர் முகிதீன் யாசினுக்கு ஆதரவாக வாக்களித்தனர், 109 உறுப்புபினர்கள் அதற்கு எதிராக வாக்களித்தனர்.

முகிதீனின் இந்த வெற்றி அவருக்கு கிடைத்துள்ள ஆதரவின் அடையாளமாக கருதப்படுகிறது என்று அரசியல் பார்வையாளர்கள் கூறியுள்ளனர்.

முந்தைய அமர்வில், அவர் 113 நாடாளுமன்ற உறுப்பினர்களின் பெரும்பான்மையை மட்டுமே கொண்டிருந்தார்.

சபாநாயகரை மாற்றுவதற்காக முகிதீன் சமர்ப்பித்த தீர்மானத்திற்கு நாடாளுமன்றத்தின் 111 உறுப்பினர்களின் வாக்குகளின் எண்ணிக்கையுடன், மெல்லியதாக இருந்தபோதிலும் அவருக்கு நாடாளுமன்றத்தின் ஆதரவு உள்ளது என்பதை இது நிரூபித்துள்ளது.