“குறுகிய காலத்தில் வாக்காளர் எண்ணிக்கை அதிர்ச்சி அளிக்கும் வகையில் அதிகரித்துள்ளது. தவிர, வேறு பல குளறுபடிகளும் நிகழ்ந்துள்ளன. வாக்காளர் பட்டியல் ஒழுங்காய் இல்லீங்கோ.”
“பாலாய் போலீஸ் கெரிஞ்சி” என்னும் பெயரில் ஒரு வாக்காளர் பதிவாகியுள்ள அதிசயம்
மலேசியன் 53: லெம்பா பந்தாயில் வாக்காளர் எண்ணிக்கை 56,000-இலிருந்து 70,000ஆகியுள்ளதா?எப்படி?அதுவும் மூன்றாண்டுகளில்.
வாக்காளர் பட்டியலில் புதிதாக இடம்பெற்றுள்ள பெயர்களில் ஒன்று பாலாய் போலீஸ் கெரிஞ்சி(கெரிஞ்சி போலீஸ் நிலையம்).இப்படி இன்னும் எத்தனை புதிய பெயர்கள் அதில் சேர்க்கப்பட்டுள்ளனவோ?
ஏலன் கோ: எப்படியும் புத்ரா ஜெயாவை பிடியில் வைத்துக்கொள்ள வேண்டும் என்பதற்காக எதையும் செய்வார்கள். வெற்றிபெறும் நோக்கத்துடன்தானே தொகுதிகளையே பிரித்துவைத்திருகிறார்கள்.
புத்ரா ஜெயாவில் 7,000 வாக்காளர்கள். ஒரு எம்பி.
புக்கிட் பிந்தாங், கெப்போங், செகாம்புட், லெம்பா பந்தாய் ஆகியவற்றில் 50,000 வாக்காளர்கள். ஆனாலும் ஒவ்வொன்றுக்கும் ஒரு எம்பிதான்.
அதைவிட மோசம் காப்பார். அங்கு வாக்காளர்கள் 115,000.ஆனால் எம்பி ஒருவர்தான்.
ஆவி வாக்காளர்கள், பாலாய் போலீஸ் கெரிஞ்சி என்ற பெயரில் அஞ்சல்வழி வாக்காளிப்போர்,அண்மைய காலமாக இந்தோனேசிய, வங்காள தேச குடியேறிகள் எல்லாருக்குமே இப்போது வாக்குரிமை உண்டு.தேர்தல் ஆணையம் (இசி) நியாயமாக நடக்க வேண்டும். இல்லையேல் பேசாமல் அம்னோ/பிஎன்னிடமே 222 இடங்களையும் கொடுத்து விடலாம்.தேர்தலுக்கு ஆகும் செலவாவது மிஞ்சும்.
பெண்டர்: இது ஒரு கடுமையான பிரச்னை.முறைகேடு மிக்க இந்த வாக்காளர் பட்டியலே பொதுத்தேர்தல்வரை அப்படி இருக்குமானால் என்னவாகும்? இப்படிப்பட்ட தில்லுமுள்ளுகளைப் பார்த்துக்கொண்டு பேசாமல் இருக்கப் போகிறோமா?
எடுத்துச்சொல்லப்படும் குறைகளை அரசாங்கம் கவனிப்பதாக தெரியவில்லை (அதுவும்தானே அதில் சம்பந்தப்பட்டுள்ளது).குறைபாடுகள் இருப்பதை இசி ஒத்துக்கொள்கிறது. ஆனால், அவற்றைச் சரிசெய்ய எந்த அளவுக்கு அது முயல்கிறது?
இவ்வளவு தில்லுமுள்ளுகளுடன் பொதுத் தேர்தல் நடக்க அனுமதிக்கக்கூடாது.
டாக்: “பாலாய் போலீஸ் கெரிஞ்சி” எந்த இனத்தைச் சேர்ந்தவர் என்பதைத் தெரிந்துகொள்ள விரும்புகிறேன். பெயருக்குப்பின் “பின்”அல்லது த/பெ இல்லை. அதனால் அது ஒரு சீனரின் பெயராகத்தான் இருக்க வேண்டும்.
ராமசாமி: டிஏபிக்கு ஞானாசிரியர்கள் தேவையில்லை
சூசாகேஸ்: நீங்கள் ஞானாசிரியரோ, அதிகாரத்தைக் கையில் எடுத்துகொண்டு செயல்படுபவரோ, அல் கப்போனோ, மைக்கல் கொர்லியோனோ, பக்காத்தானோ, அம்னோவோ- நீங்கள் யாராக இருந்தாலும் நாங்கள் சொல்ல விரும்புவது இதுதான்: உங்கள் வேலையை ஒழுங்காக செய்யாவிட்டால், உங்கள் எஜமானர்களாகிய நாங்கள் வாக்களிப்பில் எங்கள் வேலையைக் காட்டி விடுவோம். நீங்கள் அதிகாரத்தைக் கையில் வைத்துக்கொண்டிருப்பவராக இருக்கலாம்-பிபிபியின் கேவியஸ் போல-ஆனால் தேர்தலில் தோற்றபின் அதனால் என்ன பயன்?
டிபாலா: கர்பால் அரசியliல் ஒரு பெரிய ஆலமரம். ராமசாமியால் அவரின் அருகில்கூட நெருங்க முடியாது.
40ஆண்டுகளுக்குமேல் கட்சிக்கு உழைத்திருப்பவர்களை மதிக்க வேண்டும். கர்பாலை “ஞானாசிரியர்” என்று குறிப்பிட்டிருப்பது நன்றாக இல்லை.
ரிக் தியோ: இந்த விசயத்தில் நான் கர்பால் பக்கம்தான். அதிகாரம் கையில் இருப்பதாக நினைத்துகொண்டு தங்கள் நண்பர்களையும் வேண்டியவர்களையும் தேர்தல் வேட்பாளர்களாக தெரிவு செய்வோர் நமக்கு வேண்டாம்.
ஒவ்வொரு டிஏபி தலைவரும் இப்படியே செய்தால் பிறகு சிறந்த வேட்பாளர்கள் கிடைக்க மாட்டார்கள். வேட்பாளராக ஒருவரைத் தேர்வு செய்யுமுன் அவரின் தகுதிகளை முழுமையாக ஆராய வேண்டும்.
ராமசாமி இந்திய வேட்பாளர்களாகவே தேர்ந்தெடுத்திருப்பது ஏன்?பிஎன் பாணியில் இனரீதியாக செயல்படும் போக்கைக் கைவிட வேண்டும்.
தகுதி பார்த்து தேர்ந்தெடுக்க வேண்டும். பூனை கருப்போ வெள்ளையோ எலியைப் பிடிப்பதுதான் முக்கியம்.