“இது உண்மையில் விரக்தி அடைந்த பேச்சு. அறிவாற்றல் நேர்மை எங்கே போனது? வெவ்வேறு வகையான மக்களிடம் வெவ்வேறு வகையாக பேசுவது எல்லாம் வாக்குகளுக்காக!”
பிரதமர் நஜிப்: பக்கத்தான் ஆட்சியில் மலாய்க்கார்களுக்கு அழிவு ஏற்படும்.
கிளவுட்னைன்: மகாதீர் காலம் தொட்டு படாவி, இப்போது நஜிப் வரை சில தலைவர்களுடைய நிதி மற்றும் ஊழல் நடவடிக்கைகளுக்கு ஆதரவாக அம்னோ செயல்பட்டு வந்துள்ளது. தங்கள் பலவீனத்தை அறிந்துள்ள அவர்கள் மலாய் நலன்களுக்குப் போராடுவதாக நடிக்கின்றனர்.
அவ்வப்போது அங்கும் இங்கும் எலும்புத் துண்டுகளை வீசுகின்றனர். மலாய்க்காரர்களும் அந்த தந்திரத்துக்குப் பலியாகி விடுகின்றனர். அடுத்து அவர்கள் நாட்டின் கருவூலத்தைச் சூறையாடலாம். கொள்ளையும் அடிக்கலாம்.
அவர்கள் இப்போது தங்கள் சொந்த நலனைப் பாதுகாத்துக் கொள்வதற்காக மலாய்க்காரர்களை ஒன்றுபடுமாறு அதே கூக்குரலை எழுப்புகின்றனர். மலாய்க்காரர்களைக் காப்பாற்றுவதற்கு அம்னோவுக்கு அதிகாரம் தேவை என கைரி கூறியிருக்கிறார். ஆனால் உண்மையான நோக்கம் ஆளும் வர்க்கத்தைச் சேர்ந்த குடும்பங்களைப் பாதுகாப்பதாகும். அந்தக் குடும்பங்கள் சிறிய எண்ணிக்கையிலானவை. துன் அப்துல் ரசாக்கிடமிருந்து நஜிப் வந்தார். ஹுசேன் ஒன்-னிடமிருந்து ஹிஷாமுடின் வந்தார். நஜிப்பும் ஹிஷாமும் உறவுக்காரர்கள்.
அடுத்து மகாதீர் இருக்கிறார். அவர் தமது புதல்வர் முக்ரிஸை மேன்மைக்குக் கொண்டு வர அயராது பாடுபடுகிறார். கைரி படாவியின் மருமகன். ஆகவே சில குடும்பங்களே ஆட்டத்தை நடத்திக் கொண்டிருக்கின்றன.
நீலகிரி: பலப் பரீட்சைக்கு துருப்புக்களைத் தயார் செய்கின்றாரா? எது எப்படி இருந்தாலும் அம்னோவைத் தவிர வேறு எதுவாக இருந்தாலும் பரவாயில்லை.
பி தேவ் ஆனந்த் பிள்ளை: மலாய்க்காரர்களுடைய எதிர்காலம் அம்னோ கரங்களில்தான் உள்ளது என்றும் மலாய்க்காரர்களுக்கு எது நல்லது என்பது அம்னோவுக்குத்தான் தெரியும் என்றும் பிரதமர் சொல்ல வருகிறாரா? ஆகவே அவர்கள் ஊழல்வாதிகளா இல்லையா என்பது பிரச்னை அல்ல. அவர்கள் ஏமாற்றுகின்றனரா அல்லது கொள்ளையடிக்கின்றனரா என்பது முக்கியமல்ல. இந்த நாட்டை அம்னோவைத் தவிர வேறு யாரும் ஆளக் கூடாது என்பதே ஒரே பிரச்னை.
மலாய்க்காரர்கள் அந்த வாதத்திற்கு பலியானால் அடுத்த 54 ஆண்டுகளுக்கு அவர்கள் அஸ்தமனம்தான்.
வேறு ஏதும் வேலை செய்யா விட்டால் மலாய்க்காரர் அல்லாதாரை மிரட்டுவதற்கு தாங்கள் எப்போதும் தயாராக வைத்திருக்கும் ஆட்டு மந்தை உணர்வும் முற்றுகையிடப்பட்டுள்ள உணர்வும் அவிழ்த்து விடப்படும்.
ஆனால் இந்த முறை நாங்கள் அடிபணியப் போவதில்லை. மழையோ இடியோ நாம் வாக்களிக்கச் செல்வோம்.
நியாயமானவன்: அன்புள்ள மலேசிய மலாய்க்காரர்களே, அம்னோ அல்லது பக்காத்தானைத் தேர்வு செய்வது இப்போது உங்கள் கரங்களில். நாட்டின் தலைவிதியும் உங்கள் கைகளில்.
சாடிரா: இது உண்மையில் விரக்தி அடைந்த பேச்சு. அறிவாற்றல் நேர்மை எங்கே போனது? வெவ்வேறு வகையான மக்களிடம் வெவ்வேறு வகையாக பேசுவது எல்லாம் வாக்குகளுக்காக! குழம்பிய மனதுக்கு “ஒரே மலேசியா” என்றால் என்ன என்பதைப் புரிந்து கொள்ளும் ஆற்றல் இல்லை. அவரைப் பொறுத்த மட்டில் அது தேர்தலில் வெற்றி பெறுவதற்கான வெறும் சுலோகம் மட்டுமே. அனைத்து மக்களிடமும் எந்த அர்த்தமும் இல்லாமல் எல்லாவற்றையும் பேசும் அத்தகைய தலைவரை நாம் நம்ப முடியுமா?
ரஞ்சித் சிங்: மலாய்க்காரர்களுக்கு எப்போதும் அழிவு ஏற்படாது. அம்னோவுக்குத்தான் அழிவு ஏற்படும். மலாய்க்காரர்களும் மலாய்க்காரர் அல்லாதாரும் ஒருவரை ஒருவர் மேம்படுத்திக் கொண்டு அருகருகே வாழ்ந்து வருகிறோம். நாம் மலேசியர்கள் என்பதால் மலாய்க்காரர்களும் மலாய்க்காரர் அல்லாதாரும் ஒருவருக்கு ஒருவர் தீங்கு செய்ய மாட்டார்கள்.
மலாய்க்காரர் அல்லாதாராகிய நாம் முன்னேற்றத்தை விரும்புகிறோம். நாம் எப்போதும் மலாய்க்காரர்கள் தங்களுடைய இலட்சியங்களில் வெற்றி பெற உதவி வந்துள்ளோம்.
தேர்ந்தெடுக்கப்பட்ட பேராளர்கள் நமக்குள் பிரிவினையை ஏற்படுத்த நாம் அனுமதிக்கக் கூடாது. அவர்கள் தங்கள் சொந்த நிலையை வலுப்படுத்திக் கொள்ளவே அவ்வாறு செய்கின்றனர். வம்சாவளி வேறுபாடின்றி நாடு என்ற உணர்வை அவர்கள் ஊட்டவில்லை. அம்னோவோ அல்லது அதன் மண்டோர்களோ அல்லது பக்காத்தான் ராக்யாட்டோ அல்லது அதன் மண்டோர்களோ நம்மை ஆட்டிப்படைக்க அனுமதிக்கக் கூடாது.