பெர்சத்து ஷா ஆலாம் பிரிவின் தலைவர்கள் கட்சியை விட்டு வெளியேறினர்

பெர்சத்து கட்சியை விட்டு வெளியேறும் உறுப்பினர்களின் எண்ணிக்கை சிலாங்கூரில் தொடர்ந்து அதிகரித்துள்ளது. ஷா ஆலாம் பிரிவு சம்பந்தப்பட்ட பல தலைவர்கள் இன்று கட்சியை விட்டு வெளியேறுவதாக அறிவித்தனர்.

ஷா ஆலம் பிரிவு தலைவர் முகமட் நோர் தின், ஷா ஆலம் பிரிவு துணைத் தலைவர் முகமட் அஸ்லான் ஷா முகமட் அர்ஷாத், ஐந்து கிளைத் தலைவர்கள் மற்றும் அப்பிரிவின் ஏழு உறுப்பினர்கள் இதில் அடங்குவர்.

பிரிவு 9, பிரிவு 24, செத்தியா ஆலாம், புக்கிட் சுபாங் மற்றும் புக்கிட் ஜெலுத்தோங் ஆகிய ஐந்து பகுதிகளை உள்ளடக்கிய கிளைத் தலைவர்கள் கட்சியை விட்டு வெளியேறி தங்கள் விலகல் கடிதங்களை நாளை பெர்சத்து பொதுச்செயலாளருக்கு அனுப்புவார்கள் முகமட் அஸ்லான் ஷா தெரிவித்தார்.

“இன்று கட்சியை விட்டு வெளியேறும் மற்றொருவர் பெர்சத்து உச்ச மன்ற குழு உறுப்பினர் முகமட் ஹசான் இஸ்மாயில் ஆவார்” என்று ஷா ஆலாமில் இன்று நடைபெற்ற சிறப்பு செய்தியாளர் கூட்டத்தில் அவர் கூறினார்.

கடந்த சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில், சிலாங்கூரின் கோலா சிலாங்கூர், கிள்ளான் மற்றும் பாங்கி பிரிவுகளை உள்ளடக்கிய பல பெர்சத்து தலைவர்களும், அடிமட்ட உறுப்பினர்களும் கட்சியை விட்டு வெளியேறினர் என்பது குறிப்பிடத்தக்கது.