கோவிட்-19: தீவிர சிகிச்சை பிரிவில் ஏழு நோயாளிகள், 25 புதிய பாதிப்புகள்

இன்று மதியம் 12 மணி வரை, 25 புதிய கோவிட்-19 பாதிப்புகள் பதிவாகியுள்ளதாக சுகாதார இயக்குநர் டாக்டர் நூர் ஹிஷாம் அப்துல்லா தெரிவித்துள்ளார்.

மொத்தம் ஏழு நோயாளிகள் தீவிர சிகிச்சை பிரிவில் (ஐ.சி.யூ) சிகிச்சை பெற்று வருகின்றனர், அந்த எண்ணிக்கையில், இரண்டு நோயாளிகள் சுவாச உதவிகளைப் பயன்படுத்துகின்றனர்.

இருப்பினும், இறப்புகள் எதுவும் பதிவாகவில்லை என்றும், இன்று மொத்தம் 216 பாதிப்புகள் மருத்துவமனையில் சிகிக்சையில் உள்ளன என்றும் அவர் தெரிவித்துள்ளார்.