பாஸ் கட்சியின் தலைவர் அப்துல் ஹாடி அவாங் மற்றும் பாஸ் நாடாளுமன்ற உறுப்பினர்கள், தேசிய கூட்டணி அரசாங்கத்திற்கு அளித்த ஆதரவையும் ஊக்கத்தையும் பிரதமர் முகிதீன் யாசின் பெரிதும் மதித்து பாராட்டுவதாக கூறியுள்ளார்.
முகிதீன் இன்று பாஸ் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் பாஸ் செனட்டர்களுடன் நாடாளுமன்றத்தில் ஒரு நட்பு முறையான நிகழ்வில் கலந்து கொண்டதாக தனது முகநூல் வழியாக பதிவேற்றிய ஒரு இடுகையின் மூலம் முகிதீன் தெரிவித்தார்.
“முவாபாக்காட் நேஷனலில் (Muafakat Nasional) பெர்சத்து கட்சி பங்கேற்பதை வரவேற்ற பாஸ் தலைமைக்கு நான் மிகவும் நன்றியுள்ளவனாக இருக்கிறேன்” என்று அவர் கூறினார்.
அப்துல் ஹாடி அவாங், பாஸ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் பாஸ் செனட்டர்களுடன் முகிதீன் எடுத்து கொண்ட ஐந்து புகைப்படங்களும் இந்த பதிவில் பதிவேற்றப்பட்டன.