கிம் ஜாங்க் உன் – கிம் யோ ஜாங்க்
வட கொரியா அதிபர் கிம் ஜாங்க் உன் ஆட்சி அதிகாரத்தை தனது தங்கையிடம் ஒப்படைக்க முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
பியோங்யாங்: கிழக்காசிய நாடான வட கொரியாவின் தலைவர், கிம் ஜாங்க் உன், (வயது 38) உடல் நிலை குறித்தும் அவர் கோமா நிலைக்கு சென்றுவிட்டதாகவும், கடந்த சில மாதங்களுக்கு முன் பல்வேறு யூகங்களில் செய்திகள் வெளியான நிலையில் கடந்த மே மாதம் தலைநகர் பியோங்யாங் நகரில் உள்ள சன்ச்சூன் என்ற இடத்தில் பிரம்மாணட உர தொழிற்சாலை திறப்பு விழாவில் கிம் ஜாங் உன், தனது சகோதரியுடன் கலந்து கொண்டார்.
இந்நிலையில் ஆட்சியில் தனது சகோதரி கிம் யோ ஜாங்க், 31 என்பவருக்கு முக்கிய பொறுப்பு வகிக்க முடிவு செய்துள்ளதாகவும், இதற்கான புதிய கொள்கையை அறிவித்து தனக்குள் இருக்கும் அனைத்து அதிகாரத்தையும் கிம் யோ ஜாங்கிற்கு பகிர முடிவு செய்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளன. முன்னதாக உடல்நிலை குறித்து பல்வேறு சந்தேகங்கள் எழுந்துள்ள நிலையில், அவர் இல்லாத நிலையில், அவருடைய சகோதரி, கிம் யோ ஜாங்க் ஆட்சியை நிர்வகித்து வந்தாக கூறப்பட்டது குறிப்பிடத்தக்கது.
malaimalar