கொரோனா தடுப்பூசி தயாரிப்புக்கு இந்தியாவுடன் கைகோர்க்க ரஷ்யா விருப்பம்

கொரோனா வைரஸ் தடுப்பூசி ஸ்பூட்னிக்-வி தயாரிப்புக்காக இந்தியாவுடன் கைகோர்க்க ரஷ்யா முன்வருவதாக தெரிவித்துள்ளது.

மாஸ்கோ: ரஷ்யாவில் செச்செநோவ் நகரில் உள்ள மாஸ்கோ ஸ்டேட் மெடிக்கல் யுனிவர் சிட்டி ரஷ்யாவின் கமாலேயா தேசிய மைக்ரோபயாலஜி ஆராய்ச்சி மையம் இணைந்து கொரோனாவிற்கு எதிரான தடுப்பு மருந்தை கண்டுபிடித்து இருப்பதாக ரஷ்யா அறிவித்துள்ளது.

இந்த மருந்தை தனது மகளுக்கு செலுத்தப்பட்டதாக ரஷியா அதிபர் புதின் தெரிவித்தார். அவர்கள் கண்டுபிடித்த தடுப்பு மருந்திற்கு ஸ்பூட்னிக் – வி என பெயர் வைக்கப்பட்டுள்ளது. இதன் மூன்றாம் கட்ட சோதனை தற்போது நடந்து வருகிறது.

இந்தநிலையில் பெரிய அளவில் உற்பத்தியில் மருந்து தயாரிப்பிற்காக இந்தியாவின் பங்களிப்பை ரஷ்யா எதிர்பார்ப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

கொரோனா வைரஸ் தடுப்பூசி ஸ்பூட்னிக் – வி தயாரிப்புக்காக இந்தியாவுடன் கைகோர்க்க ரஷ்யா முன்வருவதாக ரஷ்ய நேரடி முதலீட்டு நிதியத்தின் (ஆர்.டி.ஐ.எஃப்) தலைமை நிர்வாக அதிகாரி கிரில் ட்மிட்ரிவ் தெரிவித்துள்ளார்.

இது குறித்து கிரில் ட்மிட்ரிவ் கூறுகையில்,

லத்தீன், அமெரிக்கா, ஆசியா மற்றும் மத்திய கிழக்கு நாடுகள் தடுப்பூசி தயாரிப்பதில் ஆர்வம் காட்டி வருகின்றன. தற்போது தடுப்பூசி உற்பத்தி தான் மிக முக்கிய பிரச்சினையாக உள்ளது.

நாங்கள் இந்தியாவின் பங்களிப்பை எதிர்பாக்கிறோம்.  தடுப்பூசியை உற்பத்தி செய்யும் திறன் இந்தியாவிடமும் இருக்கிறது என்று நாங்கள் நம்புகிறோம். இது போன்ற நோய் தடுப்பு மருந்தினை பெருமளவு தயாரிப்பதில் இந்தியா நல்ல திறன் கொண்ட நாடாகும்.  இதில் சர்வதேச ஒத்துழைப்பை ரஷ்யா எதிர்நோக்கியுள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

இந்தியாவுடன் நட்புறவில் இருக்கும் ரஷியாவிடம் இந்த ஒப்பந்தம் கையெழுத்தாகுமா ? என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. முன்னதாக ஸ்பூட்னிக் வேக்சின் மருந்து குறித்த அடிப்படை விவரங்களை ரஷ்யாவிடம் இந்தியா கேட்டுள்ளதாகவும் அதற்கான தூதரக பணிகள் நடைபெற்று வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

malaimalar