சீனாவில் சரக்கு கப்பலுடன் மோதி தீப்பிடித்த பெட்ரோல் டேங்கர் கப்பல் -14 மாலுமிகள் மாயம்

சீனாவில் பெட்ரோல் டேங்கர் கப்பல், சரக்கு கப்பலுடன் மோதி தீப்பிடித்ததையடுத்து, தீயை அணைக்க போராடி வருகின்றனர்.

ஷாங்காய்: சீனாவில் சுமார் 3000 டன் பெட்ரோல் ஏற்றிச் சென்ற டேங்கர் கப்பல், மணல் மற்றும் ஜல்லி ஏற்றி வந்த சரக்கு கப்பலுடன் மோதி தீப்பிடித்தது. யாங்ட்சே நதி முகத்துவாரத்திற்கு 1.5 நாட்டிக்கல் மைல் தொலைவில் நேற்று அதிகாலையில் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.

இதுபற்றி தகவல் அறிந்த தீயணைப்பு படையினர் மற்றொரு கப்பலில் விரைந்து சென்று தீயை அணைக்க போராடி வருகின்றனர். தீப்பிடித்த கப்பலில் பயணம் செய்த 3 மாலுமிகள் மீட்கப்பட்டனர். 14 மாலுமிகளின் கதி என்னவென்று தெரியவில்லை. மாயமான மாலுமிகளை தேடும் பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.

malaimalar