இலக்கியத்திற்கான நோபல் பரிசு அறிவிப்பு அமெரிக்க பெண் கவிஞர் லூயிக்லுக்கிற்கு அறிவிக்கப்பட்டு உள்ளது.
ஸ்டாக்ஹோம், மருத்துவம், இயற்பியல், வேதியியல், பொருளாதாரம், இலக்கியம் மற்றும் அமைதி ஆகிய 6 துறைகளில் தன்னிகரற்ற சாதனை படைக்கிறவர்களுக்கு ஆண்டுதோறும் நோபல் பரிசு வழங்கி சிறப்பிக்கப்படுகிறது. இந்த ஆண்டுக்கான நோபல் பரிசுகள் கடந்த 5-ந் தேதி முதல் அறிவிக்கப்பட்டு வருகின்றன
அந்த வகையில், மருத்துவத்துக்கான நோபல் பரிசு, ஹெபாடைடிஸ்-சி வைரசை கண்டுபிடித்த விஞ்ஞானிகள் ஹார்வே ஜே. ஆல்டர், சார்லஸ் எம்.ரைஸ், மைக்கேல் ஹாக்டன் ஆகியோருக்கும், இயற்பியலுக்கான நோபல் பரிசு கருந்துகளை உருவாக்கம், நட்சத்திர மண்டலத்தின் காணப்படும் அதிசய பொருள் கண்டுபிடிப்பு ஆகியவற்றுக்காக ரோஜர் பென்ரோஸ், ரெயின்ஹார்டு ஜென்சல், ஆண்ட்ரியா கெஸ் ஆகிய 3 விஞ்ஞானிகளுக்கும் வழங்குவதாக அறிவிக்கப்பட்டது.
இந்த வரிசையில் வேதியியலுக்கான நோபல் பரிசை சுவீடனின் ஸ்டாக்ஹோம் நகரில் சுவீடன் அறிவியல் அகாடமியின் வல்லுனர் குழு நேற்று அறிவித்தது. இந்த நோபல் பரிசை இம்மானுவேல் சர்பென்டியர், ஜெனிபர் டவுட்னா ஆகிய 2 பெண் விஞ்ஞானிகள் கூட்டாக பெறுகிறார்கள்.
அடுத்து இலக்கியத்திற்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டு உள்ளது.அமெரிக்க பெண் கவிஞர் லூயிக்லுக்கிற்கு அறிவிக்கப்பட்டு உள்ளது.
dailythanthi