பி.ஜே., ஷா ஆலம், சுபாங் ஜெயாவில் உள்ள 298 பள்ளிகளை மூட உத்தரவிடப்பட்டுள்ளது

கோவிட் 19-ன் புதிய அலையைத் தொடர்ந்து, சிலாங்கூர், பெட்டாலிங் மாவட்டத்தின் சிவப்பு மண்டலத்தில் உள்ள அனைத்து பள்ளிகளும் இன்று முதல்  அக்டோபர் 25 வரை மூடப்படும்.

இத்தகவலை மலேசியக் கல்வி அமைச்சு நேற்றைய ஊடக அறிக்கையில் அறிவித்துள்ளது.

இதன்வழி, பெட்டாலிங் மாவட்டத்தில் உள்ள பெட்டாலிங் ஜெயா, ஷா ஆலாம் மற்றும் சுபாங் ஜெயாவில் உள்ள 298 ஆரம்ப, இடைநிலைப் பள்ளிகள் உட்பட கல்வி அமைச்சில் பதிவு பெற்றுள்ள தனியார் பள்ளிகளும் அக்டோடர் 12 தொடக்கம் 25-ம் தேதி வரை மூடப்படும்.

மூடப்படவுள்ள பள்ளிகளின் பட்டியலைப் பெற்றோர், பாதுகாவலர்கள் மற்றும்  பள்ளி நிர்வாகங்கள் www.moe.gov.my எனும் கல்வி அமைச்சின் அகப்பக்கத்தில் சரிபார்த்து கொள்ளலாம் எனக் கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.