மலேசியாவில் 1,228 புதியத் தொற்றுகள், முதல்முறையாக 4 இலக்கத்தில்

 கோவிட் -19 | நாட்டில் கோவிட் -19 பெருந்தொற்றின் எண்ணிக்கை நான்கு இலக்கமாக உயர்ந்துள்ளது. இன்று 1,228 தொற்றுகள் பதிவாகியுள்ளன, இதில் சபாவில் 889 பதிவுகளும், கிள்ளான் பள்ளத்தாக்கில் 95 பதிவுகளும் அடங்கும்.

502 புதியப் பதிவுகள் சிறைத் திரளைகளைச் சேர்ந்தவை.

தொற்றிலிருந்து விடுபட்டவர்கள் எண்ணிக்கை 671, இவர்களுள் 449 பேர் சபாவைச் சேர்ந்தவர்கள்.

அவசரப்பிரிவில் 92 பேர் சிகிச்சைப் பெற்று வருகின்றனர், அவர்களில் 31 பேருக்குச் சுவாசக் கருவி தேவைப்படுகிறது.

நாட்டில் இன்று, இந்நோய்த் தொற்றினால் 7 மரணங்கள் நேர்ந்துள்ளன. அறுவர் சபாவையும் ஒருவர் பேராக்கையும் சேர்ந்தவர்கள் ஆவர்.

அக்டோபர் மாதத்தில் மட்டும், சபாவில் 77 பேர் இந்நோய்க்குப் பலியாகியுள்ளனர்.

நெகிரி செம்பிலானில் 96 புதியத் தொற்றுகள் பதிவாகியுள்ளன, அதில் 54 தொற்றுகள் புதியதொரு திரளையைச் சேர்ந்தவையாகும்.

புதியத் தொற்றுப் பதிவுகள், மாநிலம் வாரியாக :-

சபாவில் 889, நெகிரி செம்பிலானில் 96, கெடா மற்றும் சிலாங்கூரில் 76, பினாங்கில் 23, லாபுவானில் 21, பேராக்கில் 10, சரவாக் மற்றும் கோலாலம்பூரில் 8, ஜொகூரில் 7, மலாக்காவில் 3.