அமரன் – நமது பிரதமர் மித்ராவை ஒரு இளைய தளபதியிடம் (விஜய் அல்ல) ஒப்படைத்திருக்கின்றேன், 2024 லிருந்து மித்ரா ஜொலிக்கப்போகின்றது என்றார்.
ஆனால் நடந்தது என்ன? நமது இளையதளபதி 100மில்லியனை “பார்க்கிங்” பண்ணிவிட்டு, முழுமையாக செலவு செய்யபட்டு விட்டது என அறிக்கை வெளியிட்டுள்ளார். முழு விபரத்தை கேட்டால் பார்க்கிங் லோட்டுகளை டக் டக் என்று காட்டி விடுவார்.
மித்ரா (அதற்கு முன் செடிக்) ஏன் ஆரம்பிக்கப்பட்டது, அதன் குறுகிய கால மற்றும் நீண்ட கால மற்றும் நீண்ட கால குறிக்கோள் என்ன என்பது இந்த இளைய தளபதிக்கு தெரியுமா? அல்லது அவரின் சேனாதிபதியின் ஆலோசனையுடன் செயல்படுகிறாரா? என்பது தான் தெரியவில்லை,
சரி இப்பொழுது இளைய தளபதிக்கு கொடுத்து மித்ரா செலவு பட்டியலை கவனிப்போம்.
1.
654 B40 இளையர்கள் GDL என்ற கனரக வாகன ஓட்டுனர் உரிமம் பெறுவதற்கு ரிம15லட்சம். ஒரு நபரிற்கு ரிம 2,300. எந்த நபரிற்கு இந்த பணம் ஒதுக்கப்பட்டது. பயன் அடைந்த அந்த 654 பெயரை மித்ரா தனது இணைய தளத்தில் வெளியிடுமா?
2.
EC-COUNCIL CYBER SEURITY PROFESSIONAL CERTIFICATE- நீண்ட இந்த சான்றிதழ் எந்த பல்களைக்கழகம் அல்லது நிறுவனம் வெளியிடுகின்றது. ரிம 34லட்சம் இந்த பயிற்சியில் வெற்றியடைய போவது எத்தனை பேர்?
3.
பங்கு பரிவர்த்தனை பயிற்சிற்கு 35லட்சம். அடேயப்பா! எத்தனை பேரை பங்குமுதலீட்டாளர் ஆக்கப்போகின்றார்கள் பங்கு பரிவர்த்தனை நிறுவனம். “Bursa Malaysia” எத்தனை பேருக்கு பயிற்சி வழங்கப்போகின்றது?
4.
Cuti-Cuti China ஆம் சீனாவில் 10நாட்கள் 500 இந்திய மாணவர்கள் தொழிற்கல்வி சுற்றுலாவிற்கு ரிம 30 லட்சம். யாரப்பா இவர்கவள்? 10 நாட்களில் தொழிற்திறன் கல்வியை, அதுவும் சீன மொழி மட்டுமே பேசும் சீனர்களிடம் இவர்கள் என்ன கற்றுக்கொள்ளப் போனார்கள்? Super Duper இந்தியர்களாகத்தான் இவர்கள் இருக்கவேண்டும்.
5.
மனித வள அமைச்சு நமது இந்திய மாணவர்களிற்கு தொழில்திறன் கல்வி கொடுப்பது தலையாய கடமையாகும். இந்த அமைச்சுக்கு போதிய இந்திய மாணவர்கள் தொழில்திறன் கல்வி ஆர்வம் காட்டவில்லை என குறைப்படும் போது ஏன் இந்த அமைச்சுக்கு ரிம 100லட்சம்? இளைய தளபதி அவர்களே, கடந்த ஆண்டு நாடு தழுவிய நிலையில் உள்ள 23 ILP கல்லூரிகள் இந்திய மாணவர்களிற்கு எத்தனை இடம் ஒதுக்கப்பட்டுள்ளது,எவ்வளவு பேர் பதிவு செய்துள்ளனர் , இறுதியில் எத்தனை பேர் முடித்தனர், விபரம் தெரியுமா?
6.
SPUMI – யாருடா இந்த S பூமி இந்த திட்டத்திற்கு 120 லட்சம் சரி கொடுங்கப்பா கஷ்டப்படும் இந்திய வணிகர் பயன்பெறட்டும் ஆனால் பயன்பெற்ற இந்திய வணிகர்களின் பெயர்கள் மற்றும் நிறுவனத்தின் பெயர்கள் உங்கள் இணையதளத்தில் வெளியிட்டு இருக்கா? சின்ன twist எப்படா மித்ரா கடன் கொடுக்கும் நிறுவனமாக உருமாற்றம் கண்டது? பலே ஆளுங்கப்பா நீங்க…….
7.
தனியார் பாலர் பள்ளிக்கூடங்களுக்கு ரிம 100 லட்சம் ஆனா இந்த பாலர் பள்ளிகள் கல்வி இலாக்கா பதிவு செய்யப்பட்டு இருக்க வேண்டும் நஜீப் காலத்தில் பதிவு செய்யப்படாத ஆனால் சீராக செயல்படும் பாலர் பள்ளிகளுக்கு உதவி பணம் கொடுக்கப்பட்டது. பாலர் பள்ளிகளை முழு அனுமதி பெற்ற ஒரு பள்ளியாக மாற்றுவது எளிதான காரியம் அல்ல பாலர் பள்ளி நடத்தும் உரிமையாளர்களை கேட்டுப்பாருங்கள் மண்டை குழம்பி விடும்.
8.
பல்கலைக்கழகத்தில் பயிலும் இளங்கலை மற்றும் டிப்ளமோ முதலாம் மற்றும் இரண்டாம் ஆண்டு மாணவர்களுக்கு தலா 2000 ரிங்கிட் மாற்றுத்திறனாளிகளுக்கு ரிங்கிட் 3000 மொத்த ஒதுக்கீடு 250 லட்சம் ஒன்று மட்டும் புரியவில்லை இளைய தளபதி இப்பணம் கொடுக்கப்பட்டுள்ளது எனக் கூறிவிட்டார் ஆனால் மாணவர்கள் டிசம்பர் 2024 பிறகு தான் மனுக் செய்ய வேண்டும் என பின்குறிப்பு கூறியுள்ளது. யாரு காதில ரோஜாப்பூ சொருக பாக்குறீங்க…..
9.
800 நீரிழிவு நோயாளிகளுக்கு தலா ரிம 10,000 மொத்தமாக ரிம 80 லட்சம் கொடுக்கப்பட்டதா அல்லது ஒதுக்கப்பட்டதா என்று தான் புரியவில்லை. நோயாளிகள் பயன்பெற்று இருந்தால் நல்லது இல்லை என்றால் பிரபஞ்சம் உங்கள் கிட்னியை கவனித்துக் கொண்டிருக்கும்….
10.
அரசாங்க ஆதரவில் செயல்படும் National Welfare Foundation இதற்கு 150 லட்சம் உன்னத நோக்கம் தான் அவசரகால வீடு வசதி, பொருளாதார தேவை மற்றும் பேரிடர்களால் பாதிக்கப்பட்ட 14,330 பேருக்கு இந்த உதவி வழங்கப்படுமா? யார் இந்த 14,330 நபர்கள் எப்படி தேர்வு செய்தீர்கள்? அடுத்த ஆண்டு இறுதியில் உணவு பொட்டலங்கள் வழங்க நமக்கு திருநெல்வேலி அல்வா கொடுக்க எண்ணமோ ? Let’s wait and see……
11.
இறுதித் திட்டம் சைபர் பாதுகாப்பு(Awareness Programme). இத்திட்டத்திற்கு 37 லட்சம் ரிங்கட். எத்தனை இந்திய மாணவர்கள் பயனடைய போகின்றார்கள்? எந்த நிறுவனம் இந்த பயிற்சியை வழங்கியது? It’s a 100 மில்லியன் ரிங்கிட் கேள்வியாகும்.
அடேயப்பா PMX இளையதளபதியிடம் 100 மில்லியன் (ஆயிரம் லட்சம்) கொடுத்து பாவம் இந்த இந்திய சமுதாயம் ஏதாவது செய் என ஆணையிட்டார்.
GOAT படத்தில் வெற்றிகரமாக நடித்த இளைய தளபதி 100 மில்லியனை பட்டுவாடா செய்தாரா? (disbursed) அல்லது (parking) பண்ணினாரா? என்று அவரைத்தான் கேட்க வேண்டும்.