நிக்கி ஹாலே
பயங்கரவாதிகளுக்கு அடைக்கலம் அளித்ததால் பாகிஸ்தானுக்கு வழங்கி வந்த ராணுவ உதவியை அமெரிக்க அதிபர் டிரம்ப் நிறுத்தியதாக நிக்கி ஹாலே பாராட்டு தெரிவித்தார்.
பிலடெல்பியா: இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவரும் குடியரசு கட்சியின் முக்கிய தலைவருமான நிக்கி ஹாலே நேற்று பிலடெல்பியா மாநிலத்தில் நடந்த பிரச்சாரத்தில் பேசினார். அப்போது அதிபர் டிரம்பின் வெளிநாட்டு கொள்கைகளை அவர் வெகுவாகப் பாராட்டினார்.
அமெரிக்க வீரர்களைக் கொல்ல முயன்ற பயங்கரவாதிகளுக்கு அடைக்கலம் கொடுத்ததால், பாகிஸ்தானுக்கு வழங்கப்பட்டு வந்த ஒரு பில்லியன் டாலர்கள் ராணுவ உதவியை அதிபர் டிரம்ப் நிறுத்திவிட்டதாக நிக்கி தெரிவித்தார்.
எங்கள் அமெரிக்க வீரர்களைக் கொல்ல முயற்சிக்கும் பயங்கரவாதிகளுக்கு அடைக்கலம் கொடுத்துக் கொண்டிருந்த பாக்கிஸ்தானுக்கு நாங்கள் பில்லியன் டாலர் இராணுவ உதவியை வழங்கிக் கொண்டிருந்தோம். இப்போது அதை கொடுக்கவில்லை என்றார் நிக்கி.
இதேபோல் பாகிஸ்தான் பயங்கரவாதத்திற்கு நிதியுதவி செய்வதாக அமெரிக்க அதிகாரிகள் மீண்டும் மீண்டும் குற்றம் சாட்டியுள்ளனர்.
தென் கரோலினா மாநிலத்தின் ஆளுநராக இரண்டு முறை பதவி வகித்த நிக்கி ஹாலே, அமெரிக்க கேபினட்டில் அங்கம் வகித்த முதல் இந்திய அமெரிக்கர் ஆவார். இப்போது. அமெரிக்க அதிபர் தேர்தலில் டிரம்பிற்காக பிரச்சாரம் செய்கிறார்.
malaimalar