சட்டவிரோதமாக, வலுக்கட்டாயமாக ஆக்கிரமிக்கப்பட்ட பகுதிகளில் பாகிஸ்தானுக்கு உரிமை இல்லை -இந்தியா
கில்கிட்-பலுசிஸ்தான் இந்தியாவின் ஒருங்கிணைந்த பகுதியாகும் சட்டவிரோதமாக ஆக்கிரமித்துள்ள பிரதேசங்களில் பாகிஸ்தானுக்கு எந்தவிதமான உரிமையும் இல்லை என இந்திய வெளிறவுத்துறை தெரிவித்து உள்ளது.
புதுடெல்லி, கில்கிட்-பாலுசிஸ்தானுக்கு தற்காலிக மாகாண அந்தஸ்தை பாகிஸ்தானின் இம்ரான் கான் அரசு வழங்கிஉள்ளது.
பெரிய ஆர்ப்பாட்டங்களுக்கு மத்தியில், ஐநா தீர்மானத்திற்கு ஏற்ப கில்கிட்-பலுசிஸ்தானுக்கு தற்காலிக மாகாண அந்தஸ்தை வழங்க தனது அரசு முடிவு செய்துள்ளதாக பாகிஸ்தான் பிரதமர் கூறினார்.
கில்கிட்-பலுசிஸ்தான் உள்ளிட்ட ஜம்மு-காஷ்மீர் மற்றும் லடாக் யூனியன் பிரதேசங்கள் இந்தியாவின் ஒருங்கிணைந்த பகுதியாகும் என்று இந்தியா தெரிவித்துள்ளது.
இந்திய வெளியுறவுத்துறை செயலாளர் அனுராக் ஸ்ரீவாஸ்தவா கூறியதாவது:-
பாகிஸ்தான் அரசால் சட்டவிரோதமாகவும், வலுக்கட்டாயமாக ஆக்கிரமிக்கப்பட்ட பகுதிகளில் எந்தவிதமான உரிமையும் இல்லை
சட்டவிரோத மற்றும் பலவந்தமான ஆக்கிரமிப்பின் கீழ், இந்திய பிராந்தியத்தின் ஒரு பகுதிக்கு பொருள் மாற்றங்களைக் கொண்டுவருவதற்கான பாகிஸ்தானின் முயற்சியை இந்திய அரசு உறுதியாக நிராகரிக்கிறது.
கில்கிட்-பலுசிஸ்தான் உள்ளிட்ட ஜம்மு காஷ்மீர் மற்றும் லடாக் யூனியன் பிரதேசங்கள் இந்தியாவின் ஒருங்கிணைந்த பகுதியாகும் என்பதை நான் மீண்டும் வலியுறுத்துகிறேன்.
பாகிஸ்தானின் சட்டவிரோத ஆக்கிரமிப்பை மறைக்க நோக்கம் கொண்ட இத்தகைய முயற்சிகள், கடுமையான மனித உரிமை மீறல்களை மறைக்க முடியாது. ஏழு தசாப்தங்களுக்கும் மேலாக இந்த பாகிஸ்தான் ஆக்கிரமிக்கப்பட்ட பிரதேசங்களில் வசிக்கும் மக்களுக்கு சுதந்திரத்தை மறுக்க முடியாது என்று கூறி உள்ளார்.
dailythanthi