அமெரிக்க அதிபர் தேர்தல்: பிடன் 119 – டிரம்ப் 92 இடங்களில் முன்னணி

வாஷிங்டன்: அமெரிக்காவின் அடுத்த அதிபரை தேர்வு செய்வதற்கான ஓட்டு எண்ணிக்கை துவங்கியது. ஜோ பிடன் 119 இடங்களிலும், டொனால்ட் டிரம்ப் 92 இடங்களிலும் முன்னணியில் உள்ளனர்.

அமெரிக்க அதிபர் பதவிக்கான தேர்தலில் குடியரசு கட்சி சார்பில் அதிபர் டொனால்டு டிரம்பும், ஜனநாயகக் கட்சி சார்பில் முன்னாள் துணை அதிபர் ஜோ பிடனும் போட்டியிடுகின்றனர். குடியரசு கட்சி சார்பில் துணை அதிபர் மைக் பென்ஸ், ஜனநாயகக் கட்சி சார்பில் இந்தியாவை பூர்வீகமாக கொண்ட கமலா ஹாரிஸ் துணை அதிபர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளனர்.

ஓட்டுப்பதிவு முடிவடைந்த நிலையில், ஓட்டு எண்ணிக்கை இன்று துவங்கியது. மொத்தமுள்ள 538 இடங்களில் 270 இடங்களில் வெற்றி பெறுபவர் அடுத்த அமெரிக்க அதிகபராக தேர்வு செய்யப்படுவார். ஓட்டு எண்ணிக்கையில், ஜோ பிடன் கை ஓங்கி உள்ளது. பிடன் 119 இடங்களிலும், டொனால்ட் டிரம்ப் 92 இடங்களிலும் முன்னணியில் உள்ளனர்.

வெற்றி: ஒக்லஹாமா, கென்டகி, இன்டியானா, அர்கஜ்சாஸ், டென்னிசீ, வெஸ்ட் விர்ஜினியா,வில் டிரம்ப் வெற்றி பெற்றுள்ளார். நியூயார்க், நியூஜெர்ஸி, மேரிலேண்ட், மாசாசுசெட்ஸ், வெர்மாண்ட்டில் பிடன் வெற்றி பெற்றுள்ளார். தொடர்ந்து ஓட்டு எண்ணிக்கை நடந்து வருகிறது

dinamalar