அமெரிக்க அதிபர் தேர்தலில் டிரம்ப் – பைடன் இடையே கடும் போட்டி நிலவி வருகிறது.
வாஷிங்டன், அமெரிக்க அதிபர் தேர்தலில் பதிவான வாக்குகள் முழுவீச்சில் எண்ணப்பட்டு வரும் நிலையில், டிரம்ப் – பைடன் இடையே கடும் போட்டி நிலவி வருகிறது.
பெரும்பான்மை – 270, மொத்த வாக்குகள் – 538
குடியரசுக் கட்சி வேட்பாளர் டிரம்பின் தேர்வாளர் வாக்குகள் – 214
ஜனநாயகக் கட்சி வேட்பாளர் ஜோ பைடனின் தேர்வாளர் வாக்குகள் – 264
இந்தநிலையில், டொனால்ட் டிரம்ப் வட கரோலினா மற்றும் ஜார்ஜியாவில் முன்னிலை வகிக்கிறார்,
ஜோ பைடன் கிளிஞ்ச், மெச்சிகன் மற்றும் விஸ்கான்சின் முன்னிலை வகிக்ப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
இந்த 5 மாநிலங்களும் அமெரிக்க ஜனாதிபதி போட்டியில் யார் வெல்வார்கள் என்பதை தீர்மானிக்கும் என கூறப்படுகிறது.
இழுபறிக்கு என்ன காரணம்?
இதனிடையே வாக்கு எண்ணிக்கையை நிறுத்தக் கோரி டிரம்ப் சார்பில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. தமது மேற்பார்வையில் வாக்கு எண்ணிக்கையை நடத்த டிரம்ப் கோரிக்கை விடுத்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
சுப்ரீம் கோர்ட்டில் 9 நீதிபதிகள் உள்ளனர். இவர்களில் 6 பேர் டிரம்பின் குடியரசு கட்சியினர்; 3 பேர் மட்டுமே ஜனநாயக கட்சி ஆதரவாளர்கள். அதற்காக, ஒருதலைப்பட்சமாய் நியாயத்துக்குப் புறம்பாக சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பளித்து விடாது. ஆனாலும் டிரம்ப், சுப்ரீம் கோர்ட்டை அணுகப் போவதாகச் சொல்கிறார்.
அதேசமயம், பொறுமையாக இருப்போம்; நாம்தான் வெல்கிறோம் என்று நம்பிக்கையுடன் பேசுகிறார் ஜோ பைடன்.
தேர்தல் நியாயமாக நடக்கவில்லை; மோசடி செய்து வெற்றி பெற்று விட்டார்கள் என்கிற பிம்பத்தை ஏற்படுத்தி தனது தோல்வியை மறைக்க முயற்சிக்கிறார் டிரம்ப். அவர் இப்படி நடந்துகொள்ளக் காரணம்?
அமெரிக்க அதிபராக ஒருவர், அதிகபட்சமாக இரண்டு முறை (8 ஆண்டுகள்) பதவி வகிக்க முடியும். அப்படி, டிரம்புக்கு முன்னர், ஜனநாயக கட்சியின் பராக் ஒபாமா, இரண்டு முறை அதிபராக இருந்தார்.
ஒரு அதிபராக தேர்தலில் நின்று தோல்வியுற்றால் தனக்கு பெருத்த அவமானம் என்று கருதுகிறார் டிரம்ப். ஜனநாயக அரசியலில் இது இயல்பானது என்பதை புரிந்துகொள்ள மறுக்கிறார்.
தேர்தல் முடிவை நாகரீகமாக ஏற்றுக்கொண்டு செயல்பட தயார் என்று டிரம்ப் அறிவித்து இருந்தால் நன்றாக இருந்திருக்கும். அமெரிக்க அரசியல் பொதுவாக அப்படித்தான் இருந்து வருகிறது. ஆனால் எப்போதுமே அதிரடி அரசியல் செய்து வருகிற டிரம்ப், தேர்தல் முடிவிலும் அதே பாணியை கடைப்பிடிக்கிறார்
dailythanthi