சட்டமன்ற தேர்தலில் மோசடி நடந்துள்ளது- கில்கிட் பல்திஸ்தானில் எதிர்க்கட்சிகள் தீவிர போராட்டம்

போராட்டத்தில் பங்கேற்றவர்கள்

கில்கிட்-பல்திஸ்தான் சட்டமன்ற தேர்தலில் மிகப்பெரிய மோசடி நடந்திருப்பதாக கூறி எதிர்க்கட்சிகள் வீதியில் இறங்கி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

கில்கிட்: இந்தியாவின் எதிர்ப்பு மற்றும் போராட்டக் குழுக்களின் எச்சரிக்கைக்கு மத்தியில், கில்கிட்-பல்திஸ்தான் சட்டமன்றத் தேர்தலை பாகிஸ்தான் நடத்தியது. 23 தொகுதிகள் கொண்ட இந்த பகுதியில், இம்ரான்கானின் பாகிஸ்தான் தெஹ்ரீக் இ இன்சாப் கட்சி 10 தொகுதிகளை கைப்பற்றி தனிப்பெரும் கட்சியாக வெற்றி பெற்றுள்ளது. ஆனால், ஆளுங்கட்சி கள்ள ஓட்டு போட்டு வெற்றி பெற்றதாக எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டியுள்ளன.

இந்நிலையில் கில்கிட் பல்திஸ்தான் தேர்தலில் மோசடி நடந்துள்ளதாக கூறி எதிர்க்கட்சிகள் ஒன்றுதிரண்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதில் ஆயிரக்கணக்கான ஆதரவாளர்கள் கலந்துகொண்டு ஆளுங்கட்சிக்கு எதிராக முழக்கங்கள் எழுப்பினர்.

பாகிஸ்தான் மக்கள் கட்சி தலைவர் பிலாவல் பூட்டோ, பாகிஸ்தான் முஸ்லிம் லீக் (நவாஸ்) கட்சியின் மரியம் நவாஸ் உள்ளிட்ட தலைவர்களும் போராட்டத்தில் பங்கேற்றதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

malaimalar