“உத்துசான் மலேசியா ஹசானை அவரது தோழர்களுக்கு எதிராகத் தூண்டி விடுகிறது. அதனால் சிலாங்கூரில் உள்ள மலாய் முஸ்லிம்கள் அதற்கு பலியாகி விடுவர் என அது நம்புகிறது.”
ஹசான் அலி சிலாங்கூரைக் காப்பாற்றுவார் என உத்துசான் கூறுகிறது
இரண்டு காசு மதிப்பு: ஹசான் அலி நல்லதையும் கெட்டதையும் ஒன்றாக கொண்டு வந்து விட்டால் அது அதிசயம் என்பதைத் தவிர வேறு ஒன்றுமில்லை. அது இறைவனை சைத்தானுடன் கைகுலுக்கிக் கொள்ள வைப்பதைப் போன்றதாகும். அவர்கள் எத்தகைய ஒப்பந்தத்தைச் செய்து கொள்வார்கள்? நல்லதும் கெட்டதும் இணக்கத்துக்கு வர முடியுமானால் நரகத்துக்குத் தேவை இல்லாமல் போய் விடும். எவ்வளவு மகிழ்ச்சியாக இருக்கிறது!
சிந்தனை: ஊழல் மலிந்த திறமை குறைந்த அரசியல்வாதிகளிடமிருந்து சிலாங்கூர் காப்பாற்றப்பட வேண்டும். ஹசான் அலிதான் சிலாங்கூரைக் காப்பாற்ற முடியும் என்றால் சிலாங்கூரைக் காப்பாற்ற இறையருள் தேவை.
அலன் கோ: ஹசான் அலி சிலாங்கூரைக் காப்பாற்றுவார் என உத்துசான் கூறுகிறது. இரண்டு எஜமானர்களுக்கு வேலை செய்யும் ரட்சகருக்கு வாக்களிக்காத சிலாங்கூர் குடிமகன் ஒருவர் இதனைக் கூறுகிறார். உத்துசான் மிலாயு, மலேசியர்கள் நீங்கள் எண்ணுவதைப் போல முட்டாள்கள் அல்ல. அவர், சிலாங்கூருடைய ரட்சகர் எனக் கூறும் மலிவான தந்திரங்களில் ஈடுபட வேண்டாம்.
மேப்பிள் சிரப்: ஹசான் அலி அம்னோ “செல்லப் பிள்ளை” அருமையாக இருக்கிறது.
பெண்டர்: உத்துசான் மலேசியா “பத்து அப்பி” (பற்ற வைக்கும்) வேலையைச் செய்கிறது. அந்த ஏடு ஹசானை அவரது தோழர்களுக்கு எதிராகத் தூண்டி விடுகிறது. அதனால் சிலாங்கூரில் உள்ள மலாய் முஸ்லிம்கள் மலாய் முஸ்லிம் உணர்வுகளுக்கு அடிமையாகி பக்காத்தான் அரசாங்கத்தை நிராகரித்து விடுவர் என அது நம்புகிறது.
வெறுப்படைந்தவன்: பக்காத்தான் இன்னும் அவரை அடுத்த தேர்தலில் நிறுத்த எண்ணம் கொண்டுள்ளதா? அப்படிச் செய்தால் உன் கதை முடிந்தது. அவர் அம்னோவின் பொதி கழுதை. மாநிலச் சட்டமன்றத்தில் தொங்கு நிலை ஏற்பட்டால் அவர் பேராக்கைப் போன்று தவளையாக மாறி அடுத்த பக்கத்துக்குத் தாவி விடுவார். அவருக்கு மந்திரி புசார் அல்லது துணை மந்திரி புசார் பதவி கூட அவர்கள் கொடுக்கலாம். அத்துடன் மற்ற தவளைகளைப் போன்று அவருடைய முக்கியத்தும் மதிப்பு ஆகியவற்றைப் பொறுத்து நிறைய பணமும் கிடைக்கும்.
ஹசான் குறித்து எச்சரிக்கையாக இருக்க வேண்டும். அவர் சரியான நேரத்தில் பக்காத்தானை முட்டாளாக்க காத்துக் கொண்டிருக்கிறார்.
மாயாங் எமாஸ்: ஊழல் மலிந்த மலாய்க்காரர்களே ஒன்றுபட வேண்டும் என அம்னோ விரும்புகிறது. பாஸ் அதற்குத் தகுதி பெறவில்லை.
ஒய்எப்: சிலாங்கூரில் ஆற்றல் மிக்க அம்னோ தலைவர்கள் இல்லை என்றும் பாஸ் கட்சியிடம்தான் திறமையான தலைவர்கள் இருக்கின்றனர் என்றும் உத்துசான் சொல்ல வருகிறதா? மலாய்க்காரர்களை ஒன்றுபடுத்த அம்னோ-வால் முடியாது. ஆனால் அதனை பாஸ் தலைவர்கள் மட்டுமே செய்ய முடியும். எனக்குச் சிரிப்பு தாங்கவில்லை. நன்றி உத்துசான். எந்த அம்னோ மலாய்க்காரரும் மலாய்க்காரர்களை ஐக்கியப்படுத்த முடியாது,பாஸ் மட்டுமே அதனைச் செய்ய முடியும் என்ற உண்மையை ஒப்புக் கொண்டதற்கு.