மகாத்மா காந்தியின் தென்னாப்பிரிக்க பேரன் சதீஷ் துபேலியா கொரோனா பாதிப்பு காரணமாக மரணமடைந்தார்.
ஜோகன்னஸ்பர்க், மகாத்மா காந்தியின் தென்னாப்பிரிக்க பேரன் சதீஷ் துபேலியா (வயது 66) கொரோனா பாதிப்பு காரணமாக மரணமடைந்தார்.
நிமோனியா காரணமாக ஒரு மாத காலமாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தநிலையில் அவருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டது. இதன்காரணமாக நேற்று திடீரென ஏற்பட்ட மாரடைப்பால் மரணமடைந்ததாக துபேலியாவின் சகோதரி உமா துபெலியா-மெஸ்திரி தெரிவித்துள்ளார்.
சதீஷ் துபேலியா தனது வாழ்க்கையின் பெரும்பகுதியை ஊடகங்களில், குறிப்பாக வீடியோகிராஃபர் மற்றும் புகைப்படக் கலைஞராகக் கழித்தார். டர்பனுக்கு அருகிலுள்ள பீனிக்ஸ் குடியேற்றத்தில் மகாத்மாவால் தொடங்கப்பட்ட பணிகளைத் தொடர காந்தி மேம்பாட்டு அறக்கட்டளைக்கு உதவுவதில் மிகவும் தீவிரமாக இருந்தார்.
அவர் அனைத்து சமூகங்களிலும் தேவைப்படுபவர்களுக்கு உதவுவதில் புகழ்பெற்றவர் மற்றும் பல சமூக நல அமைப்புகளில் தீவிரமாக இருந்தார். அவரது நண்பர்கள் மற்றும் அவருக்கு மிகவும் நெருக்கமானவர்கள் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
துபேலியா 1860 பாரம்பரிய அறக்கட்டளையின் உறுப்பினராகவும் இருந்தார், இது நவம்பர் 16 திங்கள் அன்று டர்பனின் கரும்பு வயல்களில் வேலை செய்ய இந்தியாவிலிருந்து முதல் ஒப்பந்தம் செய்யப்பட்ட தொழிலாளர்கள் வந்ததை நினைவுகூர்ந்தது.
சதீஷ் துபேலியா, மகாத்மா காந்தியின் இரண்டாவது மகன் மணிலால் காந்தியின் பேரன் ஆவார். காந்தியடிகள் தென்னாப்பிரிக்காவில் இருந்து இந்தியா திரும்பியபோது அங்கு அவரது பணிகளை தொடா்ந்து மேற்கொள்வதற்காக மணிலால் காந்தி அந்த நாட்டிலேயே தங்கிவிட்டார். எனவே சதீஷ் துபேலியா தென்னாப்பிரிக்காவிலேயே பிறந்து வளா்ந்தார். அவருக்கு உமா துபேலியாவுடன், கீா்த்தி மேனன் என்ற மற்றொரு சகோதரியும் உள்ளார்.
சதீஷ் துபெலியாவின் இறுதி சடங்குகள் குறித்த ஏற்பாடுகள் இன்னும் அறிவிக்கப்படவில்லை
dailythanthi