நஷ்டத்தை சந்தித்துள்ள கருப்பின மற்றும் சிறுபான்மையினரின் நிறுவனங்களை காக்க நடவடிக்கை எடுக்கபட்டு வருவதாக கமலா ஹாரிஸ் தெரிவித்துள்ளார்.
வாஷிங்டன், கொரோனா ஊரடங்கு காரணமாக, நஷ்டத்தை சந்தித்துள்ள கருப்பின மற்றும் சிறுபான்மையினரின், நிறுவனங்களை காக்க, நடவடிக்கை எடுக்கபட்டு வருவதாக, அமெரிக்க துணை அதிபராக தேர்வு செய்யப்பட்டுள்ள கமலா ஹாரிஸ் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் தமது டுவிட்டர் பதிவில், கொரோனா பெருந்தொற்றிலிருந்து நசிந்து போன சிறுதொழில்களை, காக்க அதிபராக தேர்வாகி உள்ள, ஜோ பைடன் பல்வேறு திட்டங்களை தீட்டியுள்ளதாக கூறியுள்ளார்.
மேலும் உங்கள் நாட்டிற்கும் உங்களின் குடும்பங்களுக்காகவும் முகக்கவசத்தை அணியுங்கள் என தெரிவித்துள்ளார்.
dailythanthi