கனடா-அமெரிக்கா எல்லை ஜனவரி 21ந்தேதி வரை மூடப்படும் என கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ அறிவிப்பு வெளியிட்டு உள்ளார்.
ஒட்டாவா, கொரோனா வைரசால் அதிகம் பாதிக்கப்பட்ட நாடுகளில் கனடாவும் ஒன்று. அங்கு கொரோனா வைரசின் 2வது அலை தீவிரமாக பரவுகிறது. தினந்தோறும் ஆயிரக்கணக்கானோர் புதிதாக வைரஸ் தொற்றுக்கு ஆளாகி வருகிறார்கள்.
இந்தநிலையில் கொரோனா வைரஸ் காரணமாக கனடா மற்றும் அமெரிக்காவுக்கு இடையேயான எல்லை வருகிற ஜனவரி 21ந்தேதி வரை மூடப்பட்டு இருக்கும் என்று கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் டுவிட்டரில் வெளியிட்டுள்ள பதிவில், கனடா குடிமக்களை பாதுகாப்பாக வைத்திருக்க கனடா அமெரிக்கா எல்லையில் தற்போது அமலில் இருக்கும் பூட்டுதல் நடவடிக்கையை இன்னும் 30 நாட்களுக்கு நீட்டித்துள்ளோம். அதன்படி ஜனவரி மாதம் 21ந்தேதி வரை கனடா-அமெரிக்கா எல்லை மூடப்படும். இந்த முடிவுக்கு இரு தரப்பு அரசு ஒப்பு கொண்டுள்ளது என தெரிவித்துள்ளார்.
முன்னதாக கொரோனா பரவல் காரணமாக கடந்த மார்ச் மாதம் கனடா-அமெரிக்கா இடையே எல்லை மூடப்பட்டது குறிப்பிடத்தக்கது
dailythanthi