அமெரிக்க வரலாற்றில் நிகழாத வெறுப்பு அரசியல் இது..! – ஜோ பைடன் உரை

வாஷிங்டன்: அமெரிக்காவில் வரும் ஜனவரி 20-ம் தேதி ஜோ பைடன் புதிய அதிபராக ஆட்சிப் பொறுப்பை ஏற்க உள்ளார். பதவியை விட்டு வெளியேறும் டிரம்ப், தனது இறுதிகட்ட பணிகளை நிறைவு செய்து வருகிறார். வெலிங்டன் நகரில் பேசிய ஜோ பைடன், டிரம்ப் தனது தோல்வியை ஏற்க மறுத்தது குறித்து விமர்சித்தார்.

எலக்டோரால் காலேஜ், ஜோ பைடனின் வெற்றியை அதிகாரபூர்வமாக அறிவித்த பின்னர், அவர் இந்த உரையை ஆற்றினார். கொரோனா வைரஸ் தாக்கத்தையும் பொருட்படுத்தாமல் வாக்களித்த அமெரிக்க வாக்காளர்களுக்கு ஜோ பைடன் நன்றி கூறினார். ஜனநாயகத்தின் நெருப்பு பல ஆண்டுகளுக்கு முன்னரே அமெரிக்காவில் பற்ற வைக்கப்பட்டுவிட்டது. இந்த நெருப்பை கொரோனா வைரஸால் தடுக்க முடியாது. அமெரிக்க தேர்தல் வரலாற்றில் நடந்து முடிந்த 2020 அதிபர் தேர்தல்போல வார்த்தை போர், வெறுப்புணர்வு, வன்முறை சம்பவங்கள் இதுவரை நடந்ததில்லை.

குடியரசுக் கட்சி ,டிரம்பின் ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளுக்கு ஆதரவு தெரிவித்தது. இதனை ஜோ பைடன் விமர்சித்து பேசினார். அமெரிக்க உச்சநீதிமன்றம் டிரம்பின் பொய்க் குற்றச்சாட்டுக்கு தக்க பதிலடி கொடுத்துள்ளது என்று கூறிய அவர், எலக்டோரல் காலேஜ் தனது வெற்றியை அதிகாரபூர்வமாக அறிவித்தது மகிழ்ச்சி அளிப்பதாகத் தெரிவித்தார்

dinamalar