சுவாராம் மனித உரிமைகள் மீது நஜிப்புக்கு 10க்கு 4 மதிப்பெண்களை வழங்கியது

இவ்வாண்டு பல சிவில் சமூக இயக்கங்களை ஒடுக்குவதற்கு மேற்கொண்ட நடவடிக்கைகளில் மனித உரிமைகளை அத்துமீறியதற்காக அரசாங்கம் கடுமையாக குறை கூறப்பட்டுள்ளது.

மக்களுடைய உரிமைகளை நிலைநிறுத்துவதற்கு பிரதமர் நஜிப் அப்துல் ரசாக் கீழ் இயங்கும் அரசாங்கம் தவறி விட்டதாக சுவாராம் என அழைக்கப்படும் மனித உரிமை போராட்ட அமைப்பான சுவாரா ராக்யாட் மலேசியாவின் இயக்குநர் குவா கியா சூங் கூறினார்.

சிவில் உரிமைகளை விரிவுபடுத்துவதாக வாக்குறுதிகள் அளிக்கப்பட்ட போதிலும் விசாரணையின்றி தடுத்து வைப்பது போன்றவை இன்னும் நிகழ்ந்து கொண்டிருப்பதால் நான் அரசாங்கத்துக்கு 10க்கு நான்கு மதிப்பெண்களை தருகிறேன்”, என குவா சொன்னார்.

கோலாலம்பூரில் இன்று சுவாராமின் 2011ம் ஆண்டுக்கான சிவில், அரசியல் உரிமைகள் மீதான அறிக்கையை  வெளியிட்ட பின்னர் அவர் நிருபர்களிடம் பேசினார்.