ராமசாமி அவர்களே, நீங்கள் எல்லா இனங்களுக்கும் துணை முதலமைச்சராக விளங்க வேண்டும்

“நம் நாட்டில் இப்போது நடந்து கொண்டிருப்பது இது தான்…. எல்லாவற்றையும் சமூகக் கண்ணோட்டத்தில் பார்ப்பதை நாம் நிறுத்திக் கொள்ள வேண்டும்.”

வருவது வரட்டும் என்கிறார் ராமசாமி

நியாயமானவன்: இணக்கமில்லை என அனைவரும் ஒப்புக் கொள்ளலாம். ஆனால் அது ஆக்கப்பூர்வமான, நாகரீகமான, சுமூகமான முறையில் ஒருவரை ஒருவர் இழிவுபடுத்தாமல் செய்ய வேண்டும். இல்லை என்றால் கட்சி பலவீனமாகி விடும். டிஏபி-யில் சேருவதற்கு யார் முடிவு செய்தாலும் அவர்கள் டிஏபி கோட்பாடுகளை ஏற்றுக் கொள்ள வேண்டும். அந்தக் கட்சியைத் தோற்றுவித்து, தங்கள் நம்பிக்கைகாக சிறைச் சாலைக்குச் சென்றவர்களையும் மதிக்க வேண்டும்.

பழைய டிஏபி-யில் பதவிகளுக்குச் சண்டை இல்லை. அதிகாரத்துக்கு சிறுபிள்ளைத் தனமான போட்டிகளும் இல்லை. இப்போதைய டிஏபி உறுப்பினர்கள் அதே கோட்பாடுகளைப் பின்பற்றுவார்களா? கட்சியை சீர் குலைக்கக் கூடிய எந்த வேறுபாடும் சரியான முறையில் கையாளப்பட்டுத் தீர்க்கப்பட வேண்டும்.

தன்னை மட்டுமே கவனித்துக் கொள்ளும் எந்த உறுப்பினருக்கும் டிஏபி-யில் இருப்பதற்குத் தகுதி இல்லை. அனைவருடைய நன்மைக்காக தனது சொந்த “உரிமைகளையும்” தியாகம் செய்வதற்கு எந்த டிஏபி உறுப்பினருக்கும் துணிச்சல் வர வேண்டும். ஆகவே தொடர்ந்து வாக்குவாதம் செய்யும் முன்னர் உங்கள் மனதைக் கேளுங்கள்.

மலாயாமூடா: மஇகா கலகத்தை மூட்டுகின்றவர்களை வெளியேற்றியது. அவர்களில் சிலர் ஹிண்ட்ராப்-புக்குச் சென்றனர். சிலர் பிகேஆருக்கும் சிலர் டிஏபி-க்கும் சென்றனர். ஆனால் பாஸ் கட்சிக்கு யாரும் போகவில்லை.

மோகன் காந்தி: பக்காத்தான் ராக்யாட் போராட்டத்துக்கு உண்மையில் ஆதரவளிக்கின்ற அனைவரும் இப்படி பகிரங்கமாக சண்டை போடுவதை நிறுத்திக் கொள்ள வேண்டும். கர்பால், ராமா, ராயர், தனசேகரன் ஆகியோர் அதனை நிறுத்திக் கொண்டு 13வது பொதுத் தேர்தலைப் பற்றிச் சிந்திக்க வேண்டும். அவமானத்தைத் தருகின்ற அந்த அத்தியாயத்தை நீங்கள் தொடர்ந்தால் டிஏபி-க்கும் பக்காத்தான் ராக்யாட்-டுக்கும் பிரச்னையை உண்டு பண்ணுகிற அம்னோ/பிஎன் ஏஜண்டுகளாக நீங்கள் இருக்க வேண்டும்.

விஎஸ்-1965: ராமசாமியை நினைத்தால் எனக்கு வெட்கமாக இருக்கிறது. நீங்கள் எல்லா இனங்களுக்கும் துணை முதலமைச்சராக விளங்க வேண்டும். நம் நாட்டில் இப்போது நடந்து கொண்டிருப்பது இது தான்…. ஒவ்வொருவரும் இனத்தைப் பற்றித் தான் பேசுகின்றனர். அவர் உண்மையில் ஒர் இனத்துக்கு மட்டும் ‘போராட’ விரும்பினால் அவர் டிஏபி-யை விட்டு விலகி ஹிண்ட்ராப்பில் இணைய வேண்டும். எல்லாவற்றையும் சமூகக் கண்ணோட்டத்தில் பார்ப்பதை நாம் நிறுத்திக் கொள்ள வேண்டும்.”

கேஎஸ்டி: அரசியல் கட்சிகள் ரத்துச் செய்யப்பட வேண்டும் எனக் கூறுவதற்கு இதுதான் காரணம். மக்கள் அடிநிலைத் தலைவர்களுக்கு வாக்களிக்க வேண்டும். அர்ப்பணிப்பு உணர்வு கொண்ட தலைவர்களாக இருக்க வேண்டியவர்கள் அதிகாரத்துக்கும் பதவிக்கும் போராடுவது எனக்கு மிகவும் தர்ம சங்கடமாக இருக்கிறது.

பாண்டி: மிகவும் அற்புதமான தமிழ் நாடகம்தான் இது.  தமிழ்த் திரைப்படங்களைப் போல ஞாயிற்றுக்கிழமை நிகழும் மாநாட்டில் அவர்கள் ஒருவரை ஒருவர் முத்தமிட்டுக் கொண்டு பிணக்குகளை தீர்த்துக் கொள்வர். ஒரு குழுவில் இரண்டுக்கு மேற்பட்ட இந்தியர்கள் இருந்தால் இதுதான் நடக்கும். அதாவது அவர்கள் சண்டையிட்டுக் கொள்வர்! அதனால் பினாங்கில் மஇகாவுக்கு இரண்டு இடங்களை பிஎன் ஒதுக்கியுள்ளது என நான் கருதுகிறேன். அதற்கு மேல் இருந்தால் அவர்கள் சண்டையிட்டுக் கொள்வர். அன்புள்ள மாண்பு மிகுக்களே, தயவு செய்து முதிர்ச்சி அடையுங்கள். மக்களுக்காக வேலை செய்யுங்கள். கள்ளுக் கடை நிலைக்கு அரசியலைக் கொண்டு செல்ல வேண்டாம்.

TAGS: