“நஜிப் மலாய் தீவிரவாதியாக இருக்கலாம், ஆனால் நிச்சயம் அவர் பெரிதும் குழம்பிப் போயிருக்கிறார்”

“நஜிப் ஒரு நாள் ஒரே மலேசியா சிந்தனையில் இருக்கிறார். அடுத்த வாரமே மலாய் மேலாண்மை சிந்தனையைத் தொடுகிறார்.”

“நஜிப்பின் பெக்கிடா உறவுகள் அவர் மலாய் தீவிரவாதி என்பதை நிரூபிக்கிறது”

டாக்ஸ்: நஜிப், மலாய் தீவிரவாதியாக இருக்கலாம், ஆனால் நிச்சயம் அவர் பெரிதும் குழம்பிப் போயிருக்கிறார். நஜிப் ஒரு நாள் ஒரே மலேசியா சிந்தனையில் இருக்கிறார். அடுத்த வாரமே மலாய் மேலாண்மை சிந்தனையைத் தொடுகிறார்.

கிம் குவேக்: பெக்கிடா கூட்டத்தில் நஜிப் பின்பற்றிய இன தீவிரவாதப் போக்கு சீன மொழிப் பத்திரிகைகளில் இருட்டடிப்புச் செய்யப்பட்டுள்ளது. அதற்கு என்ன காரணம் என்பது நமக்கு நன்கு தெரியும்.

அந்த வழியில் தாம் நினைத்ததை சாதித்து விடலாம் என அவர் எண்ணுகிறார். அவருடைய இரட்டை வேடத்தை அம்பலப்படுத்த மாற்று ஊடகங்களை நாம் முழுமையாகப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். உண்மையில் எல்லா பிஎன் தலைவரும் அத்தகைய இரட்டை வேடத்தை போட்டுக் கொண்டிருக்கின்றனர்.

அத்தகைய தீவிரவாத அமைப்பிடமிருந்து தேர்தல் ஆதரவைப் பெறுவதற்காக இவ்வளவு வெளிப்படையாக  (நான் உங்களுக்கு உதவுகிறேன். நீங்கள் எனக்கு உதவுங்கள்) எனத் துணிச்சலாக நஜிப் கூறுவது- பிஎன் தேர்தல் வெற்றி குறித்து அவர் அதிகம் கவலைப்படுவதையே காட்டுகிறது.

குவினி: அந்த மனிதர் வியூகவாதி அல்ல. அங்கும் இங்கும் அலைந்து கொண்டிருக்கும் மனிதர். அவரால் எந்த முடிவும் எடுக்க முடியவில்லை. ஒரே மலேசியா, இனம், சமயம் ஆகியவை அவரை சூழ்ந்து கொண்டிருக்கின்றன.

துணைப் பிரதமரும் அதே ஆட்டத்தைத்தான் நடத்திக் கொண்டிருக்கிறார். இனச் சீட்டை பயன்படுத்திய பின்னர் நஜிப்பின் ஒரே மலேசியாவை முன் வைத்து மலாய்க்காரர் அல்லாதாரிடமிருந்து மதிப்பெண்களை பெற அவர் முயலுகிறார்.

அவர்கள் தங்கள் பாதுகாப்பான தொகுதிகளில் வெற்றி பெற்று விடுவார்கள் என்பதில் சந்தேகமே இல்லை. ஆனால் அவர்கள் மற்ற பிஎன் வேட்பாளர்களுக்கு நன்மை செய்யவில்லை. இரட்டை வேடத்தை எப்படி மறைப்பது? இறுதியில் எதையுமே மறைக்க முடியாது.

கேகன்: நஜிப் தாம் விரும்பும் யாரையும் ஆதரிக்கட்டும். ஆனால் ஒரே மலேசியா குப்பையை எங்களுக்கு தர வேண்டாம். பக்காத்தான் சவாலைச் சமாளிக்க அம்னோ இப்போது வலச்சாரி அமைப்புக்களுடன் உறவுகளை ஏற்படுத்திக் கொள்கிறது என்பதை ஒப்புக் கொள்ளுங்கள். வெவ்வேறான குழுக்களுக்கு வெவ்வேறான செய்திகளை கொடுப்பது இன்றைய கால கட்டத்தில் பயன் தராது. காரணம் தகவல்கள் இப்போது வெகு வேகமாகப் பரவுகின்றன. நீங்கள் இரண்டு முகங்களைக் கொண்ட வேடதாரி என்பதை அது காட்டி விடும்.

இறைவன் அல்ல: ஆகவே புதிதாக ஒன்றும் இல்லை. இந்த உலகில் தனது அரசியல் சித்தாந்தமாக இனவாதத்தையும் பாகுபாட்டையும் பயன்படுத்துகிற ஒரே கட்சி என்பது நமக்கு பல தசாப்தங்களாகவே தெரியும்.

ஆனால் இப்போது தான் நஜிப் வெளிப்படையாக  ஒரே மலேசியா கபட நாடகத்தையும் பொருளாதார உருமாற்றத் திட்டத்தையும் கைவிட்டு விட்டதாகச் சொல்கிறார்.  மசீச, மஇகா, கெரக்கான், பிபிஎஸ், போன்ற  துதி பாடும் கட்சிகள் தாங்கள் அம்னோ கைப்பாவைகள் என்பதை உணர வேண்டிய நேரம் வந்து விட்டது.

TAGS: