அமெரிக்காவில் மீண்டும் கருப்பின சிறுமி மீது போலீசார் தாக்குதல்?

சிறுமியை மடக்கிப் பிடித்த போலீசார்

அமெரிக்காவில் கருப்பின சிறுமி மீது போலீசார் ஸ்பிரே அடித்த சம்பவம் சர்சையை எழுப்பியுள்ளது.

வாஷிங்டன்: அமெரிக்க அரசியலில் கருப்பின மக்களின் உரிமைகள், சமத்துவம், சம வாய்ப்புகள் பற்றிய பிரச்சினைகள் பல ஆண்டுகளாக முக்கிய பங்கு வகிக்கிறது.

அமெரிக்காவின் வெள்ளையின போலீசார் இனப்பாகுபாடு காட்டுவதாகவும் கருப்பின குற்றவாளிகளிடம் மிகக்கடுமையாக நடந்து கொள்வதாகவும் காலமாக குற்றச்சாட்டு முன்வைக்கப்படுவதுண்டு.

இந்நிலையில், தற்போது ஓர் சம்பவம் அரங்கேறி உள்ளது. இது அமெரிக்க வெள்ளை இன போலீசார்மீது கடும்  விமர்சனத்தை உருவாக்கியுள்ளது.

அமெரிக்காவின் ரோச்சஸ்டர் மாகாணத்தைச் சேர்ந்த மனநலம் பாதிக்கப்பட்ட பெண் 9 வயது சிறுமியை காவலர்கள் தங்கள் காருக்குள் ஏற்ற முற்பட்டனர். அப்போது சிறுமி கட்டுக்கடங்காமல் எதிர்த்து போலீசாரை தாக்கியதால் அவரைக் கட்டுப்படுத்த பெப்பர் ஸ்பிரே எனப்படும் காரத்தன்மை கொண்ட ஸ்பிரேயை சிறுமியின் முகத்தில் அடித்தனர்.

இது தற்போது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. சிறுமியைக் கைது செய்த வெள்ளையின காவலரான அன்ரே ஆண்டர்சன்மீது விமர்சனம் எழுந்துள்ளது.

இதுதொடர்பாக அவர் கூறுகையில், மன நலம் பாதிக்கப்பட்ட சிறுமி தங்களைத் தாக்கியதால் அவரை பத்திரமாக அழைத்துச்செல்ல பெப்பர் ஸ்பிரே பயன்படுத்தியதாகவும், கருப்பின சிறுமி என்று பாகுபாட்டை நாங்கள் பார்க்கவில்லை, அவளை வலுக்கட்டயாக தாக்கவில்லை என தெரிவித்துள்ளார்.

malaimalar