வாஷிங்டன் : ‘இந்திய அரசு அறிமுகம் செய்துள்ள வேளாண் சட்டங்களுக்கு அமெரிக்கா ஆதரவு அளிப்பதாக கூறியுள்ளது.
மத்திய அரசு அறிமுகம் செய்துள்ள மூன்று வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து, பஞ்சாப் விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டு உள்ளனர். இந்திய அரசின் வேளாண் சட்டங்களுக்கு, அமெரிக்காவின் புதிய அதிபர் ஜோ பைடனின் நிர்வாகம் ஆதரவு தெரிவித்துள்ளது.
இந்த பிரச்னை குறித்து, நிருபர்களின் கேள்விக்கு, அமெரிக்க வெளியுறவு துறை செய்தி தொடர்பாளர் அளித்துள்ள பதில்:அமைதியான முறையில் போராட்டங்கள் நடத்துவது, ஜனநாயகத்தின் தனிச் சிறப்பாகும். இதைத் தான், இந்திய உச்ச நீதிமன்றமும் கூறியுள்ளது. எந்த பிரச்னைக்கும் பேச்சின் மூலம் தீர்வு காண முடியும்.
இந்திய அரசு அறிமுகம் செய்துள்ள வேளாண் சட்டங்களை, அமெரிக்கா வரவேற்கிறது.
விவசாய துறை சந்தையின் செயல்திறனை அதிகரிக்கும், அதிக அளவு தனியார் முதலீடுகளை ஈர்க்கும் எந்த நடவடிக்கையையும் அமெரிக்கா வரவேற்கிறது. அதுபோன்றே, இந்த சட்டங்கள் அமைந்துள்ளன.இவ்வாறு, அவர் கூறியுள்ளார்.
dinamalar