கொரோனா பாதிப்பு: அமெரிக்காவில் குடியரசு கட்சி உறுப்பினர் ரான் ரைட் காலமானார்

வாஷிங்டன், அமெரிக்காவில் டெக்சாஸ் மாகாணத்தில் குடியரசு கட்சியின் பிரதிநிதியாக இருந்து வந்தவர் ரான் ரைட் (வயது 67).  கடந்த 2 வாரங்களுக்கு முன் ரைட் மற்றும் அவரது மனைவி சூசன் ஆகிய இருவரும் டல்லாசில் உள்ள பெய்லர் மருத்துவமனையில் கொரோனா சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டனர்.

கடந்த 7ந்தேதி அமைதியான முறையில் ரைட் காலமானார் என அவரது அலுவலகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் தெரிவித்துள்ளது.  கடந்த 2018ம் ஆண்டு அமெரிக்க பிரதிநிதிகள் சபையின் உறுப்பினராக முதன்முறையாக அவர் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

இதன்பின்னர் கடந்த நவம்பரில் நடந்த பொது தேர்தலில் வெற்றி பெற்றார்.  அவர், வெளிவிவகாரம், கல்வி மற்றும் தொழிலாளர் குழுக்களுக்கான பதவியை வகித்து வந்துள்ளார்.  கடந்த 2019ம் ஆண்டு முதல் நுரையீரல் புற்றுநோயால் பாதிக்கப்பட்ட ரைட்டுக்கு மனைவி, சகோதரர், 3 குழந்தைகள் மற்றும் 9 பேரன், பேத்திகள் உள்ளனர்.

dinamalar